மூச்சுத்திணறல் அல்லது சுவாசக் கோளாறு – ஆரம்பத்திலேயே குணப்படுத்த கைவைத்தியங்கள் – Home remedies for wheezing in tamil

Written by StyleCraze

உடல்நலம் குறித்த ஒரு சிறிய அலட்சியம் கூட பெரிய நோய்க்கு வழிவகுக்கும். அந்தவகையில் நாம் ஆரம்பத்திலே கண்டுகொள்ளாமல் விட்டால் பெரிய பிரச்சனைக்கு வழிவகுக்கும் நோய்களுள் ஒன்று மூச்சுத்திணறல். குளிர்-இருமல் பிரச்சினைகள், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல உடல் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். மூச்சுத்திணறல் என்பது தொண்டை பிரச்சினை. ஆனால் அதை சிறு பிரச்சனை என நீங்க  புறக்கணிப்பது பிற அபாயங்களை ஊக்குவிக்கும்.

இதனை உடனடியாக முற்றிலுமாக குணப்படுத்தமுடியாது என்றாலும், ஒரு சில சிகிச்சைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் மெல்ல மெல்ல அதன் தீவிரத்தில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளலாம்.  சுவாசம் தான் உயிர் வாழ்க்கைக்கு முக்கியம் என்பதை மறக்க வேண்டாம். எந்த சிகிச்சையும் எடுத்துக்கொள்ளாவிட்டால் மூச்சுத்திணறல் உயிருக்கு ஆபத்தானது. இந்த கட்டுரையில் மூச்சுத்திணறல் தொடர்பான அறிகுறிகள் மற்றும் மூச்சுத்திணறல் சிகிச்சை உள்ளிட்ட முக்கிய அம்சங்களை விவாதிப்போம் வாங்க! இந்த பதிவில் விவரிக்கப்பட்டுள்ளவை உங்களுக்கு மூச்சுத்திணறல் பிரச்சினையை ஓரளவிற்கு சரிசெய்ய உதவும் என நம்புகிறோம்.  Wheezing in Tamil

மூச்சுத்திணறல் என்றால் என்ன?

மூச்சுத்திணறல் என்பது மூச்சுவிடும்போது, தொண்டையில் இருந்து லேசான விசில் ஒலி வரும் போது ஏற்படும் நிலை. இது எதனால் ஏற்படுகிறது என்றால், நுரையீரலில் சுருக்கப்பட்ட காற்றுப்பாதைகள் வழியாக காற்று செல்லும் போது இது நிகழ்கிறது (1). இப்படி நிகழும் போது, சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதைக் குறிக்கும் அறிகுறியாகும். சுவாசிக்கும்போது இந்த சத்தத்தை நீங்க கேட்க முடியும் அல்லது உணரமுடியும். மேலும் நீங்க பேசும்போது, இது உங்களுக்கு பெரும் இடையூற்றை ஏற்படுத்தலாம்.

மூச்சுத்திணறல் ஏற்பட காரணங்கள்? Causes of Wheezing in Tamil

மூச்சுத்திணறல் பிரச்சினை முக்கியமாக ஆஸ்துமா (2) உள்ளவர்களுக்கு ஏற்படலாம். கூடுதலாக, மூச்சுத்திணறலுக்கான பிற காரணங்கள் என்னவெல்லாம் இருக்கலாம் என்பதை ஒரு தொடர்ச்சியான முறையில் கீழே கொடுத்துள்ளோம். வாங்க பார்க்கலாம்!

 • சுவாசத்தின் போது காற்று நுரையீரலில் சிக்கிக்கொள்வது.
 • நுரையீரலின் பெரிய காற்றுப்பாதைகளின் பாதை சேதமடைவதால்
 • நுரையீரலில் உள்ள மிகச்சிறிய காற்றுப்பாதைகளில் வீக்கம் மற்றும் சளி உருவாக்கம்.
 • நுரையீரலுக்கு காற்று செல்லும் பாதையில் வீக்கம் மற்றும் சளி.
 • நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் காரணமாக மூச்சுத்திணறல் (Chronic Obstructive Pulmonary Disease)
 • சிஓபிடி இது ஒரு நுரையீரல் நோய். சுவாச மண்டலத்தில் தொற்று இருக்கும்போது இந்த நோய் ஏற்படலாம். இதனால் கூட மூச்சு திணறல் ஏற்படலாம்.
 • ஆசிட் ரிஃப்ளக்ஸ் நோய் என்பது வயிற்றுக்கு உணவைக் கொண்டு செல்லும் குழாயில் உள்ள கோளாறு இதுவும் மூச்சு திணறல் ஏற்பட காரணமாகும்.
 • இதய செயலிழப்புக்கான காரணங்கள் (இதய ஆஸ்துமா).
 • பூச்சி கடித்தால் ஏற்படும் ஒவ்வாமை காரணமாக மூச்சு திணறல் ஏற்படலாம்.
 • நிமோனியா போன்ற நுரையீரல் தொற்று மூச்சு திணறல் ஏற்பட முக்கிய காரணமாகும்.
 • புகைபிடிப்பதற்கான காரணங்கள்.
 • வைரஸ் தொற்றுக்கான காரணங்கள், குறிப்பாக 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளில்.
 • கார்சினாய்டு புற்றுநோய் மூச்சு திணறல் ஏற்பட காரணமாகும். (நுரையீரலில் ஏற்படும் புற்றுநோய்).
 • குரல் தண்டு செயலிழப்புக்கான காரணங்கள். இதனால் தொண்டை அசாதாரணமாக சுருங்கிவிடும். அப்போது அதிகப்படியான் மூச்சு திணறல் ஏற்படும்.
 • அதிகப்படியான சளி காரணமாக.
 • ஆஸ்பிரின் போன்ற சில மருந்துகள் காரணமாக மூச்சு திணறல் ஏற்படலாம்.

மூச்சுத்திணறலுக்கான பிற காரணங்கள் என்னவெல்லாம் என்பதை பார்த்துவிட்டோம் அடுத்த பகுதியில், மூச்சுத்திணறல் அறிகுறிகள் என்னவாக இருக்கும் என்பதை பார்ப்போமா?

மூச்சுத்திணறலின் அறிகுறிகள் Symptoms of Wheezing in Tamil

 • மூச்சுத்திணறல் அறிகுறிகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும். நீங்கள் ஏற்கனவே மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஒரு நபர் மூச்சுத்திணறல் நிலையில் சுவாசிக்கும்போது, ​​அவரது தொண்டையில் இருந்து ஒரு விசில் ஒலி வெளிவரும். இது மூச்சுத்திணறலின் பொதுவான அறிகுறியாகும்.
 • சில நேரங்களில் சுவாசிப்பதில் சிரமம் உண்டாகும்.
 • கூடுதலாக, சத்தமில்லாத மூச்சுத்திணறல் கூட அறிகுறியாக இருக்கலாம்(3). சுவாசத்தின் போது மார்பிலிருந்து வரும் ஒலி சத்தமில்லாமல் இருக்கும் அதுவும் ஒரு முக்கிய அறிகுறியாகும். எனவே, சுவாசிக்கும்போது உங்களுக்கு ஏதேனும் சத்தம் பலமாக எழுந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்.
 • அதன் பிற அறிகுறிகளை அடையாளம் காண மேலும் அறிவியல் ஆய்வுகள் தேவை. அதனை மருத்துவர்கள் மூலம் அடையாளம் கண்டுகொள்ளலாம்.

மூச்சுத்திணறலின் ஆபத்து காரணிகள்

 • ஆபத்து காரணிகள் என்பவை மூச்சுத்திணறலை ஆரம்பத்திலே நாம் கண்டுகொள்ளாமல் விட்டால் அது எந்த அளவுக்கு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதை தான் ஆபத்து காரணி என்கிறோம் கிட்டத்தட்ட அறிகுறிகள் போன்று தான்.(4) மூச்சுத்திணறலுக்கான ஆபத்து காரணிகள் பின்வருமாறு,
 • ஆஸ்துமா அல்லது அடோபியால் ஏற்படலாம். மரபணு குறைபாடுகள் காரணமாக ஏற்படும் ஒவ்வாமைகள் அடோபி என்று அழைக்கப்படுகின்றன.
 • குழந்தை பருவத்தில் மூச்சுத்திணறலை கண்டுகொள்ளாவிட்டால் தோலழற்சியை ஏற்படுத்தும்.
 • அடுத்து மூச்சுத்திணறலை கண்டுகொள்ளாவிட்டால் ஒவ்வாமை நாசியழற்சி மற்றும் மூக்கில் வீக்கம்  ஏற்படுத்தும்.
 • வைரஸ் தொற்றுக்கான காரணங்கள் கூட மூச்சு திணறல் ஏற்பட ஏதுவாக அமையலாம்.
 • சுவாச அமைப்பில் வைரஸ் தொற்று.
 • ரைனோவைரஸ் என்பது தொற்றுநோயாகும், இது தொண்டை புண் மற்றும் குளிர் போன்ற நிலைகளை மோசமாக்குகிறது. மூச்சுத்திணறலை கண்டுகொள்ளாவிட்டால் மேற்கண்டவை எளிதில் உடலில் நடக்கும்.
 • கர்ப்ப காலத்தில் புகைபிடித்தல் மற்றும் செயலற்ற புகைபிடித்தல். சிகரெட் அல்லாத ஒருவர் காற்றின் வழியாகப் பெறும் சிகரெட்டைப் புகைக்கும்போது உங்களுக்கு கிடைக்கும் புகை இவற்றால் கூட மூச்சு திணறல் ஆபத்தாக மாறலாம். (5)

மூச்சுத்திணறல் சிகிச்சை Treatment of Wheezing in Tamil

மூச்சுத்திணறல் சிகிச்சையில் பல்வேறு வகைகள் உள்ளன. கீழே குறிப்பிடப்பட்டுள்ள எந்த சிகிச்சையும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தப்படலாம்.

 • சிம்பிகார்ட்டுடன் – சிம்பிகார்ட் போன்ற மருந்துகளின் மூலம், மூச்சுத்திணறல், ஆஸ்துமா மற்றும் சிஓபிடியின் சிகிச்சையிலும் பயன்படுத்தலாம். இந்த மருந்து உள்ளிழுக்கப்படும் சிகிச்சை முறையில் பயன்படுத்தப்படுகிறது (6). ஒவ்வாமை உள்ளவர்கள் இதைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மருத்துவ ஆலோசனையின் பின்னர் மட்டுமே இதைப் பயன்படுத்தவும்.
 • ஆஸ்துமாவை குணப்படுத்துதல் – மூச்சுத்திணறலுக்கு ஆஸ்துமா ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. எனவே, ஆஸ்துமாவை குணப்படுத்த மருத்துவ சிகிச்சையை நாடலாம். மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சை முறை மூலம் நுரையீரலுக்கு காற்று செல்லும் பாதையை சரி செய்யலாம். இது மூச்சுத்திணறல் சிகிச்சைக்கு உதவக்கூடும் (7).
 • மருத்துவ மேற்பார்வையின் மூலம் – மூச்சுத்திணறல் பல காரணங்களால் ஏற்படலாம் (ஆஸ்துமா, வைரஸ் தொற்று போன்றவை) (8). அத்தகைய சூழ்நிலையில், சரியான காரணத்தை அறிய மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள். இதற்குப் பிறகு, மூச்சுத்திணறல் சிகிச்சைக்கு மருத்துவர் வழங்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் மருந்துகள் மூலம் மூச்சுத்திணறலுக்கு சிகிச்சையளிக்கப்படலாம்.
 • குறிப்பு – மேற்கண்ட எதையும் நீங்களே பயன்படுத்த வேண்டாம், முதலில் ஒரு மருத்துவரை அணுகவும்.

கட்டுரையின் அடுத்த பகுதியில், மூச்சுத்திணறலைத் தவிர்க்க என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பதை பார்ப்போம்.

மூச்சுத்திணறலைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் Prevention Tips for Wheezing in Tamil

மூச்சுத்திணறலைத் தவிர்க்க பின்வரும் வீட்டு வைத்தியங்களை தாரளமாக பின்பற்றலாம்.

1. சூடான திரவங்களை குடிக்கவும்

சூடான திரவங்களை குடிப்பதன் மூலமும் மூச்சுத்திணறல் பிரச்சினையை மெல்ல மெல்ல தவிர்க்கலாம். சூடான திரவங்களை குடிப்பதால் சளி மற்றும் தொண்டை வலி மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம். எனவே, சூடான பானத்துடன் சளிப் பிரச்சினையை நீக்குவதன் மூலம், மூச்சுத்திணறலைத் தவிர்க்கலாம் (9).

2. புகைப்பதை தவிர்த்தல்

மேலே குறிப்பிட்டுள்ளபடி, மூச்சுத்திணறலுக்கான காரணங்களில் புகைபிடித்தலும் அடங்கும். எனவே, புகைப்பதைத் தவிர்க்கவும். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இரண்டாம் நிலை புகை / செயலற்ற புகைபிடித்தல் குழந்தைகளில் ஆஸ்துமா அபாயத்தை அதிகரிக்கிறது (10). இதன் காரணமாக, மூச்சுத்திணறல் பிரச்சினை குழந்தைகளிலும் ஏற்படலாம். ஆகையால், குழந்தைகளை புகைப்பழக்கத்திலிருந்து விலக்கி வைக்கவும். அதேபோல் அந்த புகையை சுவாசிப்பதையும் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

3. ஈரப்பதமான காற்றை சுவாசிப்பதைத் தவிர்க்கவும்

ஈரப்பதமான காற்றில் சில பூஞ்சைகளும் காணப்படுகின்றன, அவை ஒரு வகையான நுண்ணுயிரிகளாகும். அவை பெரும்பாலும் ஈரப்பதமான காற்றில் செழித்து வளர்கின்றன. இந்த பூஞ்சைகள் சுவாசத்தின் வழியாக நுழையும் போது, ​​அது ஆஸ்துமா அபாயத்தை அதிகரிக்கும் மற்றும் மூச்சுத்திணறலை ஏற்படுத்தலாம். எனவே, இந்த நிலையைத் தவிர்க்க, ஏர் கண்டிஷனரில் வீட்டு ஈரப்பதத்தின் அளவை 35-50% க்கு இடையில் வைத்திருங்கள். முடிந்தவரை கதகதப்பான சூழ்நிலையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்க (11)

4. அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள்

அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது ஆஸ்துமா மற்றும் சிஓபிடியை (மூச்சுத்திணறல் தொடர்பான நோய்) குணப்படுத்த உதவும் இது மூச்சுத்திணறல் அபாயத்தை பல மடங்கு குறைக்கும் (12). இருப்பினும், சரியான அளவில் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ள உணவியல் நிபுணரை அணுகுவது நல்லது.

5. குளிர் மற்றும் வறண்ட காலநிலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டாம்

குளிர் மற்றும் வறண்ட காலநிலையில் உடற்பயிற்சி செய்வதை தவிர்த்தாலும் மூச்சுத்திணறலை தவிர்க்கலாம். உண்மையில், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, குளிர் மற்றும் வறண்ட காற்றை சுவாசிப்பது ஆஸ்துமாவின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. குளிர் மற்றும் வறண்ட காலநிலையில் உடற்பயிற்சி செய்யும் போது, ​​சுவாசத்தின் வேகம் எப்படியும் அதிகரிக்கும். எனவே, அத்தகைய இடத்தில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும்.

இறுதியாக.,,

மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு ஆகியவற்றை இந்த பதிவில்  அறிந்த பிறகு, இந்த சிக்கலைத் தவிர்ப்பது மற்றும் சிகிச்சையளிப்பது குறித்து நீங்கள் அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் நம்புகிறோம். அதே நேரத்தில், சிக்கல் அதிகமாகிவிட்டால், விரைவில் மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள். கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள உதவிக்குறிப்புகளையும் பின்பற்றவும். மூச்சுத்திணறல் அல்லது அதன் சிகிச்சை தொடர்பான எந்தவொரு தகவலுக்கும், கீழேயுள்ள கருத்து பெட்டியில் எழுதுவதன் மூலம் உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்பலாம். உங்கள் பதிலை எதிர்பார்க்கிறோம். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்துகொள்ள மறக்காதீர்கள்.

Sources

Stylecraze has strict sourcing guidelines and relies on peer-reviewed studies, academic research institutions, and medical associations. We avoid using tertiary references. You can learn more about how we ensure our content is accurate and current by reading our editorial policy.

Was this article helpful?
The following two tabs change content below.