ஆத்தீ.. வருஷமாய்யா இது ! 2025 பற்றி ட்வீட் செய்த பிரபல நிறுவனங்கள் !

Top brands share their unique insights and memorable moments from the unforgettable year.

Written by Deepa Lakshmi
Last Updated on

எப்போதும் ஆரோக்கியம் பற்றியே கட்டுரைகள் பார்த்திருப்பீர்கள். இந்த முறை கொஞ்சம் வித்யாசமாக சமூக சிந்தனையுடன் ஸ்டைல் கிரேஸ் வாசகர்களை கொஞ்சம் சிரிக்கவும் நிறைய சிந்திக்கவும் வைக்க ஒரு சிறு முயற்சி எடுத்திருக்கிறோம்.

இந்த முயற்சி வெற்றி பெற்றால் நிச்சயம் இதை விடவும் சிறந்த சிந்தனைகளுடன் உங்களை மகிழ்விக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். சரி நாம் எதை பற்றி பேசுகிறோம் என்பதை பார்க்கலாம் வாங்க!

இந்த வருடம் ஆரம்பிக்கும்போது நாம் அனைவரும் வழக்கமான உற்சாகத்துடன் அதனை வரவேற்றோம்! ஆனால் கடந்த 2019 டிசம்பரிலேயே 2025க்கான ஒரு முக்கியமான நாள் குறிக்கப்பட்டாயிற்று! அது பற்றி அறியாமலே நாம் 2025ஐ கொண்டாடிக் கொண்டிருந்தோம்.

திடீரென மார்ச் மாதம் ஆரம்பித்த கொரோனா எனும் கண்ணுக்குத் தெரியாத கிருமி இந்த முழு பூவுலகையும் ஆட்கொண்டது. எல்லோரும் வீட்டுக்குள் முடங்கினோம்.. ஒரு சிலர் வேலை இழந்தனர், ஒரு சிலர் தொழிலை இழந்தனர், மேலும் சிலர் வாழ்வாதாரத்திற்கே வழி கிடைக்காமல் போராடியபடி இருந்தார்கள்.

ஆயிற்று கிட்டத்தட்ட 9 மாதங்கள் முடிந்து விட்டது! முதலாம் லாக் டவுன்.. இரண்டாம் லாக் டவுன் எனப் படிப்படியாக இந்த உலக மனிதர்கள் தங்களை பூட்டிக் கொண்டே வந்தனர். ஒரு கட்டத்தில் உலகின் நகர்தல் சுத்தமாக நின்று போனது. விமானங்கள் அற்ற ஆகாயம் அத்தனை பரிசுத்தமாக மாறியது. பயணங்கள் அற்ற கடல் தன்னைத் தானே சுத்திகரித்துக் கொண்டது. வாகனப்புகை தொழிற்சாலை புகை இல்லாததால் காற்று தூய்மையாக மாறியது. கழிவு நீர்கள் கலக்காததால் கங்கை போல மற்ற நதிகளும் கூடத் தூய்மையானது. மனிதன் மட்டுமே வாழும் இடமாக இருந்த உலகில் பறவைகளும், டால்பின்களும், மற்ற விலங்குகளுக்கும் ஆனந்த சுதந்திரம் கிடைத்தது. அவை சந்தோஷமாக தங்களுக்கான வசிப்பிடங்களில் கடலோ, வனமோ , அத்தனை உற்சாகமாக சுதந்திரமாக உலவின.

எல்லாம் சில காலம் என்பது போல கொரோனா கிருமியின் தாக்குதல் தந்திரங்களை அறிந்து கொண்ட மனிதர்கள் அதிலிருந்து தங்களை காத்துக் கொள்ள வழிகளை கண்டுபிடித்தனர். மாஸ்க் மற்றும் சானிடைசர்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்தன. பின்னர் மீண்டும் படிப்படியாக லாக் டவுன் நீக்கப்பட்டது. இடையில் கொரோனாவே தலையில் அடித்துக் கொள்ளும்படி அதற்கே மீம் போட்டு கதற வீட்டுக் கொண்டிருந்தனர் நம் மீம் வம்சத்தார்!

இது போதாதென்று புயலின் வருகை இந்த நவம்பர் டிசம்பரில் பீதி கிளப்பிக் கொண்டு வருகின்றன. மேலும் ஐந்து புயல்கள் வரப்போவதாக செய்திகள் கூறுகின்றன. இந்த வருடம் தாண்டுவமா என அத்தனை பேருமே அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் இத்தனை ரணகளத்திற்கு காரணமான 2025 ஆம் ஆண்டு அதன் கடைசி மாதத்திற்குள் நுழைகிறது. வழக்கமாக பை பை 2025 வெல்கம் 2025 என ஒரு பதிவோடு இந்த வருடத்தை நாம் கடந்து விட முடியாதுதான் இல்லையா.

எனவே இந்த வருடத்தின் இறுதி மாதத்தில் ட்விட்டரின் ஒரு இடுகை இப்போது ட்ரெண்டில் உள்ளது.  வழக்கமாக டிவிட்டரில் நெட்டிசன்கள் பங்குதான் அதிகம் ஆனால் இம்முறை யூடியூப், விண்டோஸ் மற்றும் நெட்ஃபிக்ஸ் போன்ற பிராண்டுகள் உட்பட எல்லா பெரிய ஊடகங்களும் இதில் கலந்து கொண்டு தங்களின் கருத்தைக் கூறி வருகின்றன. சுவாரஸ்யமான அந்த இடுகை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

Twitter in the last month of this year is now on trend pinit button

2025 பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும். #2020InOneWord இதுவே ட்விட்டர் தந்த டேக் ஆகும். பொதுவாக நெட்டிசன்கள் தங்கள் ட்ரோல் வீடியோவுடன் குதிக்கும் முன்பாகவே சில பிரபல நிறுவனங்கள் இந்த ஹாஷ் டேக்கை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றன. அந்த வகையில்

  1. முதலாவதாக நெட்ப்ளிக்ஸ் தளம் இந்த டேக் பயன்படுத்தி என்ன சொல்லியிருக்கிறது என்று பார்க்கலாம் !

First lets see what the Netflix site has to say using this tag pinit button

ஏன்ன்ன்ன்ன்ன்ன் என முடிவற்ற ன் களால் நிரம்பி வழியும்படி 2025ஐ பார்த்து நெட்ப்ளிக்ஸ் OTT தளம் ட்ராமாதனமான கேள்வியை கேட்கும்படியாக இது இருக்கிறது ! வடிவேல் பட பாணியில் சொல்லப் போனால்.. ஒய் மி .. அதே ஸ்டைலில் இதனைப் படிக்கலாம் !

  1. அடுத்து யூட்யூப் அதற்கே உரிய சாதுர்யமான முறையில் ஒற்றை வார்த்தையில் இந்த 2025ம் வருடம் பற்றி கூறி இருக்கிறது !

YouTube is tactfully saying the year 2020 in a single word pinit button

அன்சப்ஸ்க்ரைப் என்பதுதான் அந்த வார்த்தை. உண்மை தான் யாராக இருந்தாலும் இந்த 2025 ம் ஆண்டை அன்சப்ஸ்க்ரைப் செய்யவே விரும்புவார்கள்!

  1. இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிகமாக சம்பாதித்த நிறுவனங்களுள் ஜூம் செயலியும் ஒன்று எனலாம். அந்த நிறுவனம் கூடத் தன்பங்கிற்கு ஒன்றை ஒற்றை வார்த்தையில் சொல்லி இருக்கிறது

Zoom Processor is one of the highest earning companies during the Corona Curfew pinit button

நியாயமாக கொரோனாவிற்கு சிலை வைத்து வழிபாடு செய்ய வேண்டிய நிறுவனம் இது. அன்ஸ்டேபிள் எனும் ஆங்கில வார்த்தையை இதற்கு ஜூம் செயலி பயன்படுத்தி இருக்கிறது. அதாவது நிலையற்ற வருடமாக 2025 இருந்தது என்பது ஜூம் செயலி சொல்லும் வேதாந்தம் ! இதைப்படிக்கும் அடங்கப்பா இது உலக நடிப்புடா சாமி எனும் கவுண்டரின் வார்த்தைகள்தான் நினைவிற்கு வருகிறது!

  1. விண்டோஸ் நிறுவனத்தாரும் இந்த ஹாஷ்டாக்கை விட்டு விடவில்லை. அவர்களுக்கே உரிய பாணியில் 2025 வருடம் பற்றி ஒற்றை வார்த்தையில் சொல்லி இருக்கின்றனர்

Windows has not left this hashtag either pinit button

அதாவது டெலிட் என்கிற வார்த்தைதான் 2025க்கு பொருத்தமானது என்கின்றனர். இதையெல்லாம் படிக்கும்போது எனக்கே பாவமாகத்தான் இருக்கிறது.

  1. க்ராம்மர்லி எனும் ஆங்கில இலக்கண செயலி அழகாக 2025ம் வருடத்தை விளக்குகிறது

An English grammar processor called Crammerley beautifully illustrates the year 2020 pinit button

எடிட் செய்தால் எல்லாம் சரியாகி விடும் என்பது போல இதன் அர்த்தம் வருகிறது. எல்லா சினிமாக்கள் மற்றும் புத்தகங்கள் கட்டுரைகளில் வேண்டாதவற்றை எடிட் செய்வது போல இந்த வருடமே வேண்டாதது என்பதுதான் அர்த்தமாக இருக்க முடியும் !

இப்படி மெக் டொனால்டு, சப்வே போன்ற பல நிறுவனங்கள் #2025 யைக் கலாய்த்து தள்ளி இருக்கின்றனர். இது இல்லாமல் பல நெட்டிசன்கள் இந்த வருடத்தை மேலும் டேமேஜ் செய்யும்படி அவரவர் விருப்பம்போல ஒற்றை வார்த்தையில் இந்த வருடத்தை விளக்கி இருக்கின்றனர். அவற்றையும் பார்க்கலாம்.

Lets look at them too pinit button

ஆணையும் பெண்ணையும் வைத்து இந்த உலகத்தை படைத்த இறைவன் போல ஆணையும் பெண்ணையும் வைத்து இந்த வருடத்தை விளக்கி இருக்கிறார் ஒரு குறும்பு நெட்டிசன்.

Unemployment என்று ஒருவர் கூறி இருக்கிறார்.

இதுவும் கொரோனா நமக்கு விட்டு சென்ற கசப்பான தடயம்தான் எனலாம். கொரோனாவிற்கு பின்னர் பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. பலர் இதனால் மனமுடைந்து குடும்பத்துடன் தற்கொலை செய்ததும் செய்திகளாக வந்தது மனதை உலுக்கியது. கொரோனாவால் உயிர் இழந்த எண்ணிக்கையில் இதனையும் சேர்ப்பார்களா என்பது என் கேள்வி.

ஒரு நெட்டிசன் 2025ம் வருட நிகழ்வுகளை காலண்டர் வடிவில் மாதா மாதம் இந்த வருடம் நடத்திய சேதாரங்களை வெளிச்சம்போட்டு காட்டி இருக்கிறார்.

ஆஸ்திரேலிய காடுகளில் உண்டான தீயில் ஆரம்பித்து மார்ச்சில் கோவிட் 19 ,வயல்களில் வெட்டுக்கிளி தாக்குதல் , என்பர் டிசம்பர் இறுதியில் நிவர் மற்றும் தொடர் புயல்கள் ஏற்படுவதை பற்றி 2025 மாதவாரியாக பிரித்து மேய்ந்திருந்தார்.

The Day After Tomorrow
2012
Armageddon
Volcano
Independece Day
Posiden
Titanic
The Core
Twister
Contagion
Tsunami
The Impossible
Sharknedo
No Escape
Jurrasic Park
Godzilla
King Kong
Predator
Infiniti War
ENDGAME
Smiling face with heart-shaped eyesThumbs up
Translate Tweet

ஒரு நபர் உலகில் வெளியான பேரழிவு குறித்த திரைப்படங்களை எல்லாம் பட்டியலிட்டு அதற்கு கீழே இந்த ஹாஷ்டாக் உபயோகித்து இருக்கிறார். அட ஆமால்ல என்று அவரது புத்திசாலித்தனத்தை பாராட்டுவதா அல்லது நமது விதியை நோவதா என்பதுதான் என்னால் முடிவெடுக்க முடியவில்லை.

இப்படி நம்மை பலவிதத்திலும் டேமேஜ் செய்த 2025ம் வருடத்தை பலரும் #2020InOneWord மூலம் பலவிதமாக வறுத்து எடுத்துக் கொண்டு வருகின்றனர். போகிற போக்கை பார்த்தால் இன்னும் பல வருடங்களுக்கு மனிதர்களிடம் இருந்து சாபம் பெற்ற வருடமாக இந்த 2025ம் வருடம் இருக்கப்போகிறது என்பதில் ஐயமில்லை.

எங்கள் சக பணியாளர்களிடம் ஒரு சர்வே நடத்தினோம். அவற்றில் ஒரு சில வார்த்தைகள் சுவாரஸ்யமாக இருந்தன.

  • Minesweeper என எங்கள் நிறுவன ஊழியர் சைத்ரா கூறினார்.
  • Virus மற்றும் The Mask என அர்பிதா கூறியிருக்கிறார்.
  • epic fail என சாரல் ஜெயின் கூறுகிறார்
  • Bittersweet என்று நிஹாரிகா வசைபாடுகிறார்
  • as fast as 20-20 என்று iPL உடன் பொருத்திப் பார்க்கிறார் சைத்ரா
  • Shift+Del என இந்த நினைவுகளை மொத்தமாக அழிக்க சொல்கிறார் அனுஜ்
  • The Wicked Witch of the Wuhan என்றும் ஒரு சக பணியாளர் சொல்லி இருக்கிறார்
  • 2025- A great year for memes! என சுதேஷ்னா கூறியிருக்கிறார்
  • WFH  இயர் என ஸ்ருதி கூறுகிறார்
  • 2025- The Year God Went On A Vacation என்றும் சைத்ரா கூறுகிறார்

இப்படி பலரும் 2025 பற்றி பலவிதமாக தங்களுடைய மனத்தாங்கலை ஜாலியாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

என்னைப் பொறுத்தவரை நான் ட்வீட் செய்யப்போவது இதுதான் – பாடம்.

ஆம் 2025ம் வருடம் நமக்கு மிகப்பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. இதற்கான பரீட்சை எப்போது வாய்க்குமோ தெரியவில்லை.

இருப்பதை வைத்து வாழக் கற்றுக் கொண்டிருக்கிறோம், குடும்பத்தை உண்மையாகவே கவனித்துப் பார்க்க ஆரம்பித்திருக்கிறோம் , பரிசுத்தமாக நம்மை வைத்துக் கொள்ள பிரயாசை எடுக்கிறோம், அடுத்த ஆணை/பெண்ணை நெருங்காமல் பேசுவதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறோம், உறவுகளில் கள்ளத்தனம் இல்லாத வருடமாக இந்த வருடம் இருந்திருக்கும் என்பது என் நம்பிக்கை. ( வெளிய போனாதானய்யா கள்ள உறவு, சினிமா தியேட்டர் கார்னர் சீட், லாட்ஜ் எல்லாம்! )

மிக முக்கியமாக இந்த மொத்த பூமியும் நமக்கானது மட்டுமே என்கிற எண்ணத்தில் இருந்து விலகி மற்ற உயிர்களையும் உற்று பார்க்க ஆரம்பித்திருக்கிறோம். நான் யார் தெரியுமா என்கிற அகங்காரத்தில் இருந்து சற்றே வெளிவந்திருக்கிறோம். கடைநிலை ஊழியர்களை மதிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறோம். நமக்காக தனது உயிரைப் பணயம் வைக்கும் முன் வரிசை வீரர்களை நேசிக்க கற்றுக் கொண்டிருக்கிறோம்.. இப்படி நிறைய பாடங்களை இந்த 2025ம் வருடம் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது.

சரியாகக் கற்று தேர்ந்தோமானால் நமக்கு நல்லது. இனி வரும் தலைமுறைக்கான அற்புதமான உலகை நாம் விட்டு செல்கிறோம் என்பதை உறுதி செய்வதற்காக பிறந்தது தான் இந்த 2025 என்றால் மிகை இல்லை

Was this article helpful?
thumbsupthumbsdown

disqus_comment

Community Experiences

Join the conversation and become a part of our empowering community! Share your stories, experiences, and insights to connect with other beauty, lifestyle, and health enthusiasts.

Latest Articles