சினிமா நட்சத்திரங்களின் காதல் முறிவுகள் நமக்குச் சொல்லித் தரும் பாடம் என்ன ?


by Deepa Lakshmi

எல்லாவிதமான அனுபவங்களையும்நாமே நம் அனுபவங்களால் தெரிந்து கொள்ள முடியாது. நம் கண்ணெதிரே நடந்து கொண்டிருக்கும் மற்றவர்களின் வாழ்க்கையும் நமக்கு சில பாடங்களை கற்றுத்தான் தருகிறது.

இவரை போல வாழ வேண்டும் அவரைப் போல ஆகவேண்டும் என்பது பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கும் ஆசைகளாக இருக்கிறது. அதிலும் உச்ச நட்சத்திர பிரபலங்களை பார்த்து அவர்களுக்கு இந்த எண்ணங்கள் தோன்றுகின்றன. பிரபல நடிகர் நடிகைகளின் உடைகள் , அவர்கள் அணியும் ஃபாஷன் அக்சஸரீஸ் எல்லாம் ஒரு குறிப்பிட்ட திரைப்பட வெற்றிக்குப் பின் பரவலாகும்.

நம் ஆதர்ஷ நடிக நடிகையரைப் போல ஆக விரும்பும் அனைவரும் அதனை வாங்கி அணிந்து அவர்களின் பிம்பமாக தாம் மாறிவிட்டதாகவே நம்புவார்கள். அதிலும் பலர் ஹேர்ஸ்டைல் வைப்பதும் மற்ற ஆடைகள் அணிவதும் டாட்டூ இடுவதும் என இதைப் பற்றி நாம் சொல்லிக் கொண்டே போகலாம்.

உண்மைக்கும் பிரபலமாக இருப்பது என்பது அவ்வளவு சிறப்பான விஷயம் அல்ல என்பதும் உண்மைதான்.  பிரபலங்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் காதல் உறவில் இருந்தால் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கப்படும். இப்படியான கிசுகிசுக்கள் சொல்வதற்கு எனவே சில பி ஆர் ஓ க்களும் பத்திரிகைகளும் இயங்குகின்றன.

நமது சொந்த வாழ்க்கை மற்றவர்களால் விமர்சிக்கப்படும் நமக்கு என்ன தோன்றும் என்பதை யோசித்தால் பிரபலங்களின் சிரமங்கள் நமக்கு புரிய வரும்.

Source: mygoodtimes

என்ன செய்ய பிரபலங்களின் வாழ்வில் இது தவிர்க்க முடியாத ஒரு கூத்து. தான் மற்றவர்களால் கண்காணிக்கப்படுகிறோம் என்கிற நிலையிலும் அவர்கள் காதல் வயப்படுவது இயற்கைதான். ஆனால்  அதன்பின் அவர்கள் பிரிவது அந்த ஜோடியால் ஏற்றுக் கொள்ள முடிகிறதோ என்னவோ உலகிற்கு தாங்க முடியாது. ரசிகர் உலகிற்கு அல்லது பார்வையாளர் உலகிற்கு இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றுதான் ( break up stories of cini stars in tamil ).

பலரும் பார்க்க புகழின் உச்சிக்கு சென்ற நபர்கள் தங்கள் சொந்த வாழ்க்கை சோகங்களால் நிலை தடுமாறி நின்ற கதைகள் பல உள்ளன. அவற்றைத் திரைப்படங்கள் ஆக்கினாலே பல வருடங்கள் நம் சினிமா உலகில் கதைப் பஞ்சம் உண்டாகாது.

உச்சத்தில் உள்ள நட்சத்திரங்களும் நம்மைப் போல சாமான்யர்கள் தான் என்பதை சில விஷயங்கள் உணர்த்துகின்றன. முன்பெல்லாம் இலை மறை காய் மறையாக மறைந்திருந்த மனக்கசப்புகள் இப்போதெல்லாம் விவாகரத்து அல்லது காதல் ரத்து செய்திகளின் மூலம் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் ஒரு சில பிரபலங்களின் காதல் முறிவுகள் நமக்கு என்னென்ன கற்றுக் கொடுக்கின்றன என்பதை பார்க்கலாம்.

கமல்ஹாசன் – கௌதமி

கமல்ஹாசன் தன்னை தன் சுயத்தை வெளிகாட்டிக் கொள்ளத் தயங்காத மனிதர் இருப்பினும் காலம் கற்றுத் தந்த பாடங்கள் மற்றும் அவரது அரசியல் மாற்றங்கள் அவரை தற்போது அமைதி காக்க செய்திருக்கின்றன எனலாம். முதல் மனைவி வாணி, மற்றும் இரண்டாவது மனைவி சரிகா இந்த திருமண வாழ்க்கையில் தனக்கான தேடல்கள் திருமணத்தில் கிடைக்காது என்பதை உணர்ந்த கமல்ஹாசன் இருவரின் பிரிவிற்கு பின் நீண்ட நாட்கள் தனிமையை துணையாக்கி கொண்டவர்.

அந்த நேரங்களில் எடுக்கப்பட்ட கமலின்  படங்கள் பெரும்பாலும் காமெடி திரைப்படங்களாகவே இருந்தன. அவரது மன அழுத்தங்களில் இருந்து விடுபடவே அவர் இப்படியான கதைக்களத்தை தேர்ந்தெடுப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. அதன் பின்னர் நடிகை கௌதமி கமலுடன் கிசுகிசுக்கப்பட்டார். கமலுக்கு பிடித்த ஆங்கிலத் திரைப்படங்கள், ஆங்கில புத்தகங்கள் என கௌதமி தன்னை முழுமையாக கமலுடன் வாழத் தயார் செய்ததாக ஒரு கிசுகிசு உண்டு.  கமல் கௌதமி  காதல் திருமணம் என்கிற அமைப்பின்றி செயல்பட்டது. ஒன்றல்ல இரண்டல்ல 13 வருட தாம்பத்யத்திற்குப் பிறகு கௌதமி கமல் இருவரும் பிரிவதாக சொல்லப்பட்டது. பக்குவம் கொண்ட இரு துணைகள் பிரியும்போது ஒருவரை ஒருவர் பழி சொல்லிக் கொள்ளாமல் பிரிவது போலவே இவர்கள் பிரிவும் இருந்தது.

அதன் பின்னர் நடிகர் கமல்ஹாசன் தலைவர் கமல்ஹாசன் ஆனார். மக்கள் நீதி மய்யம் வெற்றிகளை நோக்கி காத்திருக்கிறது. இந்த நேரத்திலும் கமல்ஹாசன் அவர்கள் கமல்ஹாசனுடன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் பூஜா குமாருடன் கிசுகிசுக்கப்பட்டார். அவரது குடும்ப புகைப்படத்தில் பூஜா குமாரும் இடம் பெற்றார். அது வரலாறு ஆனது.

நமக்குச் சொல்லித் தரும் பாடம்

கமல்ஹாசன் கௌதமி (kamalhaasan) (gauthami) இவர்கள் பிரிவில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது மௌனமான பிரிதல் அல்லது பக்குவமான விடை கொடல் எனும் நிலைதான். யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஆரம்பித்த இந்த இருவரின் உறவு அனைவரிடமும் வெளிப்படையாக அறிவித்து பிரிந்து கொண்டது இயற்கையின் விளையாட்டுகளில் ஒன்று எனலாம். தாங்கி கொள்ள முடியாத நிலை வரும் போது மேலும் சுமக்க முடியாமல் மூச்சடைத்து இறந்து போவதை விடவும் பிரிந்து போவது நல்லது.

ரன்பீர் – தீபிகா படுகோன்

Source: tosshub.com

இன்றைக்கு தீபிகா ரன்வீரின் மனைவி. ரன்பீர் அலியாவின் காதலர்.  இருப்பினும் ஒரு காலத்தில்  பாலிவுட்டின் ஆதர்ஷ ஜோடியாக இவர்கள் இருந்தார்கள் என்பதை யாரும் மறக்க முடியாது. எனினும் இந்தக் முன்னாள் காதல் இப்போது ஏன் பேசுபொருளாகிறது என்றால்  தீபிகா ரன்பிர் காதலில் துரோகம் முக்கிய இடம் வகித்தது. நம் சாதாரண மனிதர்கள் வாழ்வில் துரோகம் செய்த ஆண்களைக் கடந்த பல பெண்களுக்கு தீபிகா ஒரு நல்ல முன்னுதாரணமாக இருந்தார். ரன்பீர் தனக்கு துரோகம் செய்வதை தானே கையும் களவுமாக கண்டுபிடித்தவர் தீபிகா படுகோன்.

தன்னை இரண்டு வருடமாக நேசிக்கும்போதே ரன்பீர் கத்ரீனா கயிப் உடன் ஒன்றாக இருக்கும்போது தீபிகா படுகோன் பார்த்து விட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் ரன்பீரின் கண்ணீர் தீபிகா மனதை மாற்றவே தீபிகா அப்போது ரன்பீரை மன்னித்தார். ஆனால் ரன்பிருக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்தும் மீண்டும்  தன்னை ஏமாற்றியதை அறிந்த தீபிகா படுகோன் ஒரேயடியாகத் தன் காதலை முறித்துக் கொண்டார்.

நமக்குச் சொல்லித் தரும் பாடம்

நாம் நேசித்த அன்பு மனம் நம்மால் அவரது துரோகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் ஒப்புக் கொள்ளும் அல்லது அதையும் முடிந்தால் நிரூபி என்று சவாலும் விடலாம். தானாகவே திருந்தி உண்மையாகவே நம்மை மட்டுமே நேசிக்கும் நபர்கள் என்பது மிக மிக மிக அரிதான அதிசய நிகழ்வு. இன்னொரு வாய்ப்பை நாம் அவர்களுக்குத் தருவதால் அவர்கள் மீண்டும் மாட்டிக் கொள்ளாத முறையில் துரோகம் செய்யவே கற்றுக் கொள்வார்கள்.

ரன்பீர் – தீபிகா படுகோன் (ranbeer – deepika padukone) இவர்கள் காதலில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் எதுவென்றால் துரோகம் என்பதை எப்போதுமே மன்னிக்காதீர்கள் என்பது மட்டுமே. முதல் முறை மன்னிக்கப்படும்போது அவர்களுக்கு இரண்டாம் வாய்ப்பு வழங்கப்படுகிறது. எதற்கு என்றால் நம்மை உண்மையாகக் காதலிக்க அல்ல.. மீண்டும் துரோகம் செய்வதற்குத்தான் நாம் இரண்டாம் வாய்ப்பு கொடுக்கிறோம்.

பிரகாஷ் ராஜ் – லலிதகுமாரி

Source: popxo.com

பிரகாஷ் ராஜ்  வில்லனாக அறிமுகம் ஆனாலும் விரைவில் தனது திறமையான நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர். இவர் நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை லலிதகுமாரியை 1994ல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தாலும் இதில் ஒரு குழந்தை 2004ம் வருடம் இறந்து விட்டார். மகன் இறப்புக்குப் பின்னர்  பிரகாஷ் ராஜ் 2009ஆம் வருடம் லலிதகுமாரியிடம் இருந்து விவாகரத்து வாங்கினார். இவர்கள் விவாகரத்து இதனால் தான் எனப் பல வதந்திகள்  எழுந்தாலும் பிரகாஷ் ராஜ் தான் எழுதிய சொல்லாததும் உண்மை புத்தகத்தில் லலிதகுமாரி மற்றும் தனக்கிடையேயான ரசனை மாறுபாடுகளைக் குறிப்பிட்டுள்ளார்.

2009 விவாகரத்து பெற்றபின்  2010ம் வருடம் பாலிவுட் கோரியோக்ராபர் போனி வர்மாவைத் திருமணம் செய்தார். இவர்களுக்கிடையில் வயது வித்யாசம் 12 வருடங்கள். இந்த தம்பதிக்கு வேதாந்த் என்கிற மகன் இருக்கிறார். இரண்டாவது திருமணம் செய்த பின்னாலும் கூட  தனது முதல் மனைவியின் பிள்ளைகளோடும் பிரகாஷ்ராஜ் நேரம் செலவிடுகிறார். தன்னுடைய முதல் மனைவியின் மகள்களுக்கான பொருளாதாரத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுக்கிறார்.

நமக்குச் சொல்லித் தரும் பாடம்

Prakash raj lalithakumari இந்தப் பிரிவில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஒருவருக்கு நன்றியாக இருப்பதற்காக ஒருவருக்கு காட்டும் பதில் நன்றியாக உங்களின் திருமணம் நடக்க அனுமதிக்காதீர்கள். நடிகை டிஸ்கோ சாந்திதான் ஆரம்ப கால சினிமா தேடல்களின் போது பிரகாஷ் ராஜிற்கு உதவி செய்திருக்கிறார். அந்த நன்றியின் அடிப்படையில் தான் லலிதாகுமாரியைத் திருமணம் செய்ததாக அவர் புத்தகத்தில் சொல்லப்படுகிறது.

திருமணம் உங்கள் மனதின் ஈர்ப்பு காரணமாக நடக்கலாம் ஆனால் மற்றவருக்கு நன்றி செலுத்தும் கடமையாக மாறிவிடமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

Was this article helpful?
The following two tabs change content below.
scorecardresearch