அஷ்வினே.. ! நீங்கதான் வின்னரா ! வைரலாகிறது cooku with comali Ashwin சிம்பு கையால் கப் வாங்கிய புகைப்படம் !
அசத்தல் காட்சிகள், புகைப்படத்தில் கையெழுதும் வெற்றியின் மகிழ்ச்சி!

Image: ShutterStock
இந்த லாக் டவுன் நேரத்தில் சோகத்தில் இருந்த தமிழ் மக்களுக்கு பெரும் ஆறுதல் தந்த ஒரு டிவி ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகும் இந்த ஷோ பெரும்பாலான தமிழ் மக்களின் மனம் கவர்ந்த ஷோ வாக மாறியிருக்கிறது.
ஏற்கனவே முதல் சீசனில் வனிதா வெற்றியாளர் ஆன நிலையில் தற்போதைய சீஸனின் வின்னர் யார் என்கிற தகவல் கசிந்திருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி செஃப் தாமு அவர்கள் ஒரு பத்திரிகைக்கு அளித்த பிரத்யேக பேட்டி மூலம் மேலும் பல தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
எப்போது சனி ஞாயிறு வரும் குக் வித் கோமாளி ( Cooku with Comali ) பார்க்கலாம் என ஒரு சாரார் நினைக்கிறார்கள் ஒரு சிலரோ எப்போதெல்லாம் அவர்கள் மனம் சோகம் ஆகிறதோ அல்லது அவர்களுக்கு எனெர்ஜி தேவையாகிறதோ அப்போதெல்லாம் ஹாட் ஸ்டாரை திறந்து குக் வித் கோமாளியின் ஏதோ ஒரு எபிசோடை பார்த்து பிறந்த பயனை அடைந்து வருகிறார்கள்!
View this post on Instagram
அந்த அளவிற்கு ஒரு சாதாரண சமையல் ஷோ ஹிட் ஆக காரணம் அதில் ததும்பி வழியும் நகைச்சுவை மட்டுமே. தீவுகளாகிப் போன மனிதர்கள் உலகில் சந்தோஷம் என்பதும் விர்ச்சுவல் உலகில் இருந்து வருவதாகவே நம்பப்படுகிறது போலும். சந்தேகங்கள் நிறைந்த இந்த உலகில் சந்தோஷங்களைக் கண்டடைவது என்பது மிக சிரமமான ஒன்றுதான்.
ஆனால் ஒரு டிவி ஷோ உங்களின் சங்கடங்களை தகர்த்து ஒரு சில மணி நேரம் உங்களை முழுமையான சந்தோஷத்திற்கு ஆனந்தத்திற்கும் ஆளாக்குகிறது என்றால் அது குக் வித் கோமாளி ஷோ ( Cooku with Comali ) மட்டுமே.
2019 நவம்பரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஷோ தன்னுடைய முதல் சீசனிலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன் , உமா ரியாஸ் , பிரியங்கா ரோபோசங்கர், தாடி பாலாஜி , ரேகா , ஞானசம்பந்தம் , மோகன் வைத்யா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர் #cwc .
இந்த சமையல் போட்டியில் குக்குகளை விடவும் பிரபலமானது கோமாளிகள் தான். ஏனெனில் சமையல் பற்றித் துளியும் தெரியாதவர்களை தெரிந்தவருடன் ஜோடி சேர்த்து அவர்களுடைய கோமாளித்தனங்கள் தாண்டி அந்த சமையல் சுவையாக வந்திருந்தால் மட்டுமே நாம் அந்த எபிசோட் தாண்ட முடியும். கருவேப்பிலை கடுகு பற்றிக் கூடத் தெரியாத கோமாளிகள் எக்ஸாடிக் டிஷ் களை எப்படி சமைத்து முடிக்கிறார்கள் என்பதுதான் நிகழ்ச்சியின் பிளாட்.
ஒவ்வொரு வாரமும், பிரபல குக்குகள் தங்கள் கோமாளிகளுடன் ஜோடி சேருவதுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. இதற்கே 20 நிமிடங்கள் ஆகும். ஆனால் இங்கே தான் சுவாரஸ்யமும் கூட. தனக்கு வாய்த்த கோமாளி யார் எனவும் அவர்களை எப்படி கையாள்வது எனவும் ஒரு குக் தீர்மானித்து அதன் பின்னர் என்ன சமைக்கலாம் என்பதைத் தீர்மானித்து அதன் பின் சமைக்க வேண்டும்.
இந்த அணிகள் அட்வாண்டேஜ் டாஸ்க் 1 மற்றும் டாஸ்க் 2 இல் போட்டியிடுகின்றன அங்கும் ஒரு சில தடங்கல்களை செய்கிறார்கள். கைகளைக் கட்டுவது, கண்களைக் கட்டுவது, முகம் பார்க்க முடியாமல் கட்டுவது என வித்யாசமான டாஸ்குகளை விதம் விதமாக யோசித்து அதையும் தருகிறார்கள். அதையெல்லாம் தாண்டி ஜெயித்த அணிகள் மெயின் டாஸ்க் மற்றும் இம்யூனிட்டி / எலிமினேஷன் டாஸ்கில் போட்டியிடுகின்றன #CWC2GrandFinale.
முதல் சீசனில் வனிதா விஜயகுமார் , உமா ரியாஸ் போன்ற டான் களிடம் சிக்கி சீரழிந்த கோமாளிகள் கதியால் வயிறு வலிக்க சிரித்து மகிழ்ந்தது தமிழ் உலகம்.
ஆனால் முதல் சீஸனையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு இரண்டாவது சீஸனின் அட்ராசிட்டிஸ் அதிகமாகவே இருக்கிறது. முதல் சீசன் என்பதால் கோமாளிகள் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார்கள் போல. ஆனால் இரண்டாவது சீசனில் இறங்கி விளையாடி நம் அனைவரையும் பயமின்றி மகிழ்வித்திருக்கிறார்கள் நம் கோமாளிகள்.
அவற்றுள் ஷிவாங்கி, புகழ் தனி ரகம். ஷிவாங்கியின் இன்னொசென்ட் இயல்புகள் கேமராவின் கண்களுக்கு அழகான விருந்தாக அமைகின்றன. அதுவும் அஷ்வின் மீதான ஷிவாங்கியின் க்ரஷ் இப்போது உலக அளவில் அதிகம் தமிழர்களால் பேசப்படுகிறது #CWC2.
அஷ்வின் மீது ப்ரியமற்ற பெண்கள் யாரேனும் இருக்கிறார்களா எனும் அளவிற்குத் தன்னுடைய அழகாலும் தன்னுடைய மென்மையான குணத்தாலும் அனைவரையும் கவர்ந்திருக்கிறார் அஷ்வின். ஷிவாங்கியின் விளையாட்டுத்தனமான க்ரஷ் மற்றும் அவரின் குறும்புத்தனங்கள் மூலம் அஷ்வின் மேலும் பிரபலமாகி இருக்கிறார்.
புகழ் பற்றி நாம் தனியாக சொல்ல என்ன இருக்கிறது ? அவரின் காதல் லீலைகளால் மட்டுமல்ல முகபாவங்களால் பலரைத் தன்னுடைய அன்பு வலைக்குள் சிக்க .வைத்திருக்கிறார். ரம்யா பாண்டியனிடம் ஆரம்பித்து சுனிதா வரை தன்னுடைய காதலை கவலையே இல்லாமல் விநியோகம் செய்வதாலும் சட்டென மாறி மீண்டும் பழைய நிலைக்கு வரும் முக பாவனைகளாலும் புகழ் நம்மை ஒவ்வொரு எபிஸோடிலும் சிரிக்க மட்டுமா வைக்கிறார்? நம் கவலைகளை மறக்கவும் வைக்கிறார்!
பாலா.. கவுண்ட்டர் மன்னன் ஆக இருக்கும் பாலாவின் தனித்திறமைகள் நம்மை வியக்க வைக்கின்றன. நடனம் முதல் அடுக்கு மொழி நாடகம் வரை அத்தனையும் அசால்டாக அடித்து தூள் கிளப்புகிறார் பாலா. இதுவரை ரொமான்ஸ் செய்யாத பாலா இந்த சீசனில் ரித்விகாவுடன் ரொமான்ஸ் காட்டி அதிலும் பங்கமாகி இருக்கிறார்.
View this post on Instagram
சுனிதா.. அவசியம் பேச வேண்டிய ஒரு கோமாளிதான். அஸ்ஸாமில் இருந்து மொழியறியாமல் தமிழ் சேனல் ஒன்றில் பல வருடங்களாக இருக்கிறார் என்றால் அது ஆச்சர்யம்தான். தமிழ் தெரியாததால் இவ்வளவு நாளாக பிரபலம் ஆகாமல் இருந்த சுனிதாவிற்கு அவரது பலவீனமே இப்போது பலமாகி இருக்கிறது. சுனிதாவின் மழலை தமிழ் அவ்வளவு அழகாக இருக்கிறது.
அவரது தனித்தமிழில் அவர் பாடும் தமிழ் பாடல்கள் எல்லாமே வேற லெவல் மற்றும் அவரது உரையாடும் தமிழ் இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய கூடுதல் பலமாக மாறியிருக்கிறது எனலாம். மற்றும் சுனிதா ஆரம்பத்தில் அஷ்வின் மீது கிராஷ் இருப்பது போல காட்டிக் கொண்டாலும் அவருக்கென தனிப்பட்ட பரிசினை கொண்டு வந்து கொடுத்தாலும் ஷிவாங்கிக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து அஷ்வினிடம் இருந்த கடந்த சில வாரங்களாக ஒதுங்கியே இருக்கிறார் எனலாம் #ashwinkumar_ak.
இப்படி நம் மனதை பலவகையிலும் கொள்ளையடித்த கோமாளிகள் மற்றும் அஷ்வின் தந்த தரமான ரெசிபிக்கள் மற்றும் கனியின் அறுசுவை மாயங்கள் மேலும் பாபா பாஸ்கரின் அசாத்திய சுவை தேர்வுகள் இது தவிர ஷகிலாவின் மற்றொரு முகமான சமையல் திறன் முகம் இவை அனைத்தையும் நாம் மறக்கவே முடியாது.
ஆனால் இவை எல்லாமே இப்போது முடிவுக்கு வந்தாகி விட்டன. விரைவில் முடிய வேண்டிய குக் வித் கோமாளி சீசன் இரண்டு ரசிகர்களுக்காக நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருந்தாலும் தற்போது அதன் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது.
கடந்த திங்கள் அன்று அதிகாலை 3.30 வரை ஷூட் நடந்து பைனலிஸ்ட் தேர்வாகி விட்டதாக தற்போது வலைத்தளங்களில் வைரல் செய்திகள் பரவி வருகின்றன. எப்போது நினைத்தாலும் நம்மை சந்தோஷப்படுத்தும் குக் வித் கோமாளியின் பைனலிஸ்ட் மற்றும் ரன்னர் அப் விபரங்கள் வருகின்ற சனி மற்றும் ஞாயிறன்று நமக்குத் தெரிந்து விடும் என்றாலும் இப்போது ஷூட்டிங் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
அதில் அஸ்வின் கையில் கப்புடன் செஃப் தாமு மற்றும் சிம்பு போன்றோர் இருப்பது போன்ற புகைப்படம் வைரலாகி இருக்கின்றது. ஆனாலும் வின்னர் கனி தான் என்றும் ரன்னர் அப் தான் அஷ்வின் என்றும் சொல்லப்படுகிறது. இதன் சரியான முடிவை காண நாம் சற்றுக் காத்திருக்க வேண்டும் என்றாலும்.. அவரவருக்கு பிடித்த போட்டியாளர்கள் அனைவர் மனதையும் வென்ற விதத்தில் வெற்றியாளர்கள்தான்.
இதில் அஷ்வின் தன்னுடைய தரமான பல வித்யாசமான ரெசிபிக்களை நம் அனைவருக்கும் கொடுத்திருக்கிறார். மேலும் ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முழு அடையாளமாகவே அஷ்வின் இருப்பதாலேயே அவர் தமிழகப் பெண்களின் ஹார்ட் த்ரோப் ஆக மாறி இருக்கிறார்.
கனி தன்னுடைய பொறுமையால் பல அற்புதமான ரெசிபிக்களை அறிமுகம் செய்தார். அவருக்கு காரக்குழம்பு கனி என்கிற பெயர் இருந்தாலும் தயிர் சாதம் கொண்டு அவர் தயாரித்த பிரிட்டர்ஸ் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பாபா பாஸ்கர் தன்னுடைய அதிரடியான சமையல் மற்றும் வெள்ளந்தியான நடத்தைகளால் அனைவர் மனதிலும் அமர்ந்தார். அதிலும் அசைவ வகைகளில் அவர் செய்த உணவுகள் நம் நாவில் நீர் ஊறும் வகையறாதான்.
ஷகிலாம்மா செய்த அசைவ உணவுகள் மற்றும் பல வகை உணவு வகைகள் நம்மால் மறுபடி மறுபடி சமைக்கபட்டுக் கொண்டிருக்கிறது. பவித்ராவின் முன்னேற்றம் நம்மை சந்தோஷப்படுத்தியது.
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரக்ஷன் நம்மை அழகாக இந்த நிகழ்ச்சியோடு ஒன்றிணைய வைக்க உதவியவர்களில் ஒருவர். ஜட்ஜ் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு இவர்களின் அன்பான மற்றும் மாறுபட்ட விளையாட்டுத்தனமான அணுகுமுறை இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு மற்றொரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த ஐந்து பைனலிஸ்டுகளில் யார் உறுதியான பைனலிஸ்ட் என்பதை அறிய இன்னும் சில நாட்கள் காத்திருப்போம். அது வரை குக் வித் கோமாளியில் எந்த எபிசோடையாவது தேர்ந்தெடுத்து பார்த்து சிரித்திருப்போம்.

Community Experiences
Join the conversation and become a part of our empowering community! Share your stories, experiences, and insights to connect with other beauty, lifestyle, and health enthusiasts.