இந்தப் புதிய அறிகுறிகளை அலட்சியம் செய்ய வேண்டாம்.. அது கொரோனாவாக இருக்கலாம்..!

சுகம் பாதிக்கும் புதிய சிக்னல்கள் கவனமான நடவடிக்கையுடன் தேவை உருவாக்கும்!

Written by Deepa Lakshmi
Last Updated on

கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. மற்ற நாடுகள் இந்தியாவிற்கு ரெட் சிக்னல் கொடுத்து இந்தியாவில் இருந்து யாரும் வர வேண்டாம் என்று கூறி வருகின்ற அளவிற்கு தொற்றின் பாதிப்பானது அதிகரித்துள்ளது (covid second wave).

pinit button

கடந்த நாட்களில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பாதிப்பாளர்கள் இந்தியாவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டாவது அலை பாதிப்பு மட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் மாறி திரிபு வகைகளாக மாறி வருகிறது. அதனால் அதன் வீரியத்தை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உண்டாகி இருக்கும் புதிய வகை கொரோனா தொற்று மிகவும் வலிமையானது. அதனால் தான் மிக இளம் வயதினர் கூட இதில் பாதிக்கப்படுகின்றனர்.

கொரோனா அதிகரிக்க என்ன காரணம் ?

What causes corona to increase pinit button
Image: IStock

மாஸ்க் : தற்போது இவ்வளவு வீரியம் மிக்கதாக இந்த தீநுண்மி மாறியிருக்கும்போதும் பலர் முகமூடி அணிவதில்லை. மீறி அணியும் ஒரு சிலர் சரியான முறையில் அணிவதில்லை. தவறான முறையில் மாஸ்க் அணிந்தால் கோவிட் தொற்றை நீங்கள் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகலாம். மூக்கு வாய் இரண்டுமே கொரோனா தொற்று நுழையும் வாசல் படிகள் . ஆகவே அதனை கண்டிப்பாக மூடியாக வேண்டும். தாடைக்கு மாஸ்க் எதற்கு ? தவிர பயன்படுத்திய முகமூடிகளை நாட்கணக்கில் பயன்படுத்துவது , காட்டன் மாஸ்க் துவைக்காமல் பயன்படுத்துவது போன்றவையும் உங்களுக்கு பல சிக்கல்களை உண்டாக்கும் (wear mask).

லாக் டவுன் விதிகள் புறக்கணிப்பு : நீண்ட கால லாக் டவுனிற்கு பிறகு மால்கள். தியேட்டர்கள் போன்றவை மற்றும் அனைத்து சுற்றுலா தளங்கள் போன்றவை திறக்கப்பட்டன. ஒர்க் பிரம் ஹோம் வசதிகள் இருந்தாலும் பல மக்கள் வேலை முடிந்ததும் வீட்டிற்கு செல்லாமல் வேலை நேரம் முடிந்ததும் பீச், ஹோட்டல் போன்றவைகளை நிரப்புகின்றனர் . தேவையற்ற சமயங்களில் வெளியே செல்வதை கூட்டங்களுடன் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். தடுப்பூசிகள் தரப்பட்ட பின்னர் பலர் மாஸ்க் அணிவதில்லை. யாரேனும் ஒருவருக்கு பாதிப்பு இருந்தாலும் இது பலரை தொற்றும் அபாயம் கொண்டது.

முன்னெச்சரிக்கை அற்ற நம்பிக்கை : என்னதான் நமக்கு நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் நண்பர்களாக இருந்தாலும் அவர்களை சந்திக்க செல்வது பலமுறை யோசித்து செல்ல வேண்டிய செயல். அவர்கள் அலட்சியம் காரணமாக நமக்கு பாதிப்பு உண்டாகலாம். யாருடன் பழகினாலும் இடைவெளி நிர்வாகிப்பது நல்லது.

கொரோனா வராமல் எப்படிக் காப்பது ?

How to prevent corona from coming pinit button
Image: IStock

மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி, மற்றும் கைகளைக் கழுவுதல் போன்றவற்றை தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டும்.

நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் சாவி, கைப்பிடி, கைப்பை போன்றவற்றை தொடர்ந்து சானிடைசர் கொண்டு செய்து கொள்ள வேண்டும். செருப்புகளை வெளியில் விடலாம். அதிகப்படியான விருந்தினர்களை அழைக்காமல் இருங்கள். நீங்களும் செல்லாமல் இருங்கள் (sanitize your belongings).

விருந்துகள் பார்ட்டிகளுக்கு செல்லாமல் இருப்பதும், மக்கள் நிறைந்த இடங்களுக்கு போகாமல் இருப்பதும் முடிந்தவரை பக்கத்தில் உள்ள கடைகளில் பொருள்களை வாங்குவதும் பாதுகாப்பானவை.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். பழங்கள் போன்றவற்றை தினமும் உட்கொள்ளுங்கள். ப்ரோட்டீன் உணவுகளை சாப்பிடுங்கள். அதே நேரம் கடைகளில் வாங்கி உண்பதை முடிந்தவரை தவிருங்கள் (immunity booster foods).

ஏற்கனவே இணை நோய்கள் கொண்டவர்களை கொரோனா வைரஸ் (corona virus ) எளிதில் தாக்கும் என்பதால் அப்படியானவர்கள் பலமடங்கு கவனமாக இருங்கள். அதற்காக ஓசிடி முறைக்கு ஆளாக வேண்டாம். கொரோனா உங்களை நெருங்காமல் இருக்க நீங்கள் யாரையும் நெருங்காமல் இருப்பதே போதுமானது.

கொரோனா – இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்ய வேண்டாம்

Corona - Do not ignore these symptoms pinit button
Image: IStock

கடுமையான இந்த தொற்றானது தற்போது பல அறிகுறைகளை கொண்டதாக இருப்பதால் இதனை விரைவில் கண்டறிவதும் அதற்கேற்ப சிகிச்சை மேற்கொள்வதும் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. பெரும்பாலும் வீட்டுத் தனிமை போதுமானது. ஆனாலும் நோயின் தீவிரம் அறிந்த பின்னர் மருத்துவர் அறிவுரைப் படி நடப்பதே நல்லது.

வயதானவர்கள் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்கள் (Comorbidity ) கொண்டவர்களை இது அதிகமாக பாதிக்கச் செய்கிறது. ஆரோக்கியமானவர்களையும் இது மிகவும் பலவீனம் கொண்டவர்களாக மாற்றி விடுகிறது.

SARS-COV2 அறிகுறிகள் ஆரம்பத்தில் மிக லேசானவை போலத் தோன்றும். ஆனால் போகப் போகத் தீவிரமடையும். வைரஸ் தொற்று உச்சத்தில் உள்ள காலம் இது அதனால் அறிகுறிகள் ஏற்பட்ட முதல் வாரம் மிக முக்கியமானது. நீங்கள் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டிய அறிகுறிகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

1. மார்பு வலி

Chest pain pinit button
Image: IStock

SARS-COV2 தொற்று நுரையீரலில் உள்ள மியூகோசல் லைனிங் என்னு பகுதியைத் தாக்குகிறது. ஆனால் பல நேரங்களில் கோவிட் கிருமிகள் மார்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வலி உண்டாக்குகிறது. அல்லது அசெளகரியத்தை ஏற்படுத்துகிறது. COVID பாசிட்டிவ்  நோயாளிகள் பெரும்பாலும் கீழ் மார்பு பகுதிகளில் அல்லது மார்பெலும்பில் வலியை அனுபவிக்கின்றனர். இப்படியான அசௌகரியங்கள் உங்களுக்கு இருப்பின் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

2. மூச்சு விட சிரமமாக இருக்கும்

difficult than breathing pinit button
Image: IStock

கொரோனா நம் சுவாசத்தை நிறுத்துவதற்காக உருவான கிருமி என்பது தான் உண்மை. ஏனெனில் முதலில் இது நம் சுவாசப் பாதையைத் தாக்குகிறது. உங்கள் சுவாசப் பாதையில் மேல் மற்றும் ஆரோக்கியமான செல்களுக்குள் இவை புகுந்து தீவிர சேதம் விளைவிப்பதால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. வழக்கத்திற்கு மாறான சுவாசப் பிரச்னைகள் உங்களுக்கு இருந்தால் அது கொரோனா அறிகுறியாக இருக்கலாம்.

3. நிறம் மாறும் உதடுகள்

Color changing lips pinit button
Image: IStock

உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது உடல் நீலம் பாரிக்கிறது. அதை ஒரு அறிகுறியாக கொண்டோமானால் உடலின் ஆக்சிஜன் அளவு குறையும் போது உதடுகள் நீல நிறம் பெறுகின்றன. இதுவும் கோவிட் தொற்றின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. இது நடந்தால் உயிருக்கு ஆபத்து என்பதால் இதனை அலட்சியம் செய்ய வேண்டாம். அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

4. ஆக்சிஜென் அளவு

Oxygen pinit button
Image: IStock

உங்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருந்தால் கோவிட் நிமோனியா( Covid Pneumonia ) உண்டாகலாம். இதனால் நுரையீரல் காற்றுப்பைகள் பாதிக்கப்படும். அவற்றில் திரவம் உண்டாகவும் கூடும். இதனால் உடலின் ஆக்சிஜன் அளவில் சில மாறுபாடுகள் ஏற்படும். பெரும்பாலும் பாதிக்கப்பட்டவருக்கே இந்த அறிகுறிகள் தெரியாது. அதனால் தான் ஆக்சிமீட்டர் இப்போது பரவலாக விற்பனையாகி வருகின்றன. சுவாச சிக்கலுடன் ஆக்சிஜன் குறைபாடும் இருந்தால் நீங்கள் நிச்சயம் மருத்துவரை அணுக வேண்டும்.

5. கிறுகிறுப்பு அல்லது குழப்பம்

confusion pinit button
Image: IStock

COVID-19 தொற்று உங்கள் மூளையிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. லேசான மயக்கம் அல்லது மனக்குழப்பங்கள் போன்றவை இதன் அடையாளமாக இருக்கலாம். அடிக்கடி மயக்கம் , தெளிவற்ற மனநிலை (திடீரென ஏற்படுவது ) அதிகப்படியான சோம்பல் , போன்றவை கோவிட் தொற்றின் மற்றொரு அறிகுறிகளாகப் பார்க்கப்படுகின்றன. சாதாரண வேலைகளைக் கூட சிரமப்பட்டு செய்தல், வார்த்தை குளறுதல் போன்றவை இருந்தால் நீங்கள் மருத்துவரை அணுகலாம்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் நீங்கள் உங்களுக்குள் சோதித்துக் கொள்ள மட்டுமே.. இப்படியான அறிகுறிகள் இருந்தால் நீங்கள் உடனடியாக மருத்துவருக்கு அழையுங்கள். அதுதான் உங்கள் உடல்நிலைக்கு சிறந்த சிகிச்சையினை வழங்க முடியும்.

Was this article helpful?
thumbsupthumbsdown

disqus_comment

Community Experiences

Join the conversation and become a part of our empowering community! Share your stories, experiences, and insights to connect with other beauty, lifestyle, and health enthusiasts.

Latest Articles