குருபெயர்ச்சி மூலம் பணமழையில் நனையப்போகும் 5 அதிர்ஷ்ட ராசிக்கார்களில் நீங்களும் ஒருவரா? சரிபார்த்து விடுங்கள்!

விடிவாகும் வாய்ப்புகள், பொருளாதார வளர்ச்சியில் உங்களை முன்னேற்றுங்கள்!

Written by StyleCraze
Last Updated on

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த அதிசார குருபெயர்ச்சியில் அதிர்ஷ்ட மழை பொழியப் போகும் ராசிகளில் நான்கு ராசிகள் முக்கியமானவை. அவற்றுள் உங்கள் ராசியும் இருக்கிறதா என்பதையும் உங்கள் குடும்பத்தினர் ராசி பலன்களையும் சரிபார்த்துக் கொண்டு இந்த குருபெயர்ச்சி தரப்போகும் அளப்பரிய நன்மைகளை கொண்டாடி அனுபவியுங்கள்.

1. மேஷ ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

Priesthood benefits for Aries pinit button
Image: Shutterstock

குருவானவர் ஏப்ரல் 6 முதல் செப்டம்பர் 15 வரை உங்கள் ராசியில் 11வது வீட்டில் பெயர்ச்சியாகி இருப்பார். இது உங்களுக்கு அற்புதமான காலம் எனலாம். பணவரவு தாராளமாக இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும். பலவிதங்களில் வருமானம் பெற நீங்கள் பல முதலீடுகள் மற்றும் முயற்சிகளைத் தொடங்கலாம். இந்த நேரம் உங்கள் வெற்றி சதவிகிதம் அதிகளவு இருப்பதால் நீங்கள் தைரியமாக இருக்கலாம். வெளிநாடு மூலம் பணவரவு தொழில் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. செப்டம்பர் 15க்கு பிறகு நவம்பர் 20 வரை கொஞ்சம் சிரமம் தரும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் பணியில் கவனமாக இருக்க வேண்டும். குழப்பங்கள் நேரலாம் மற்றும் தந்தை உடல்நலம் பாதிக்கப்படலாம் என்றாலும் நவம்பர் 20க்கு பிறகு மீண்டும் வெற்றியும் அதிர்ஷ்டமும் உங்களைத் தொடரும் என்பதால் நிம்மதியாக இருங்கள். இந்த காலங்களில் மேஷ ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

பரிகாரம் : தினமும் வெளியில் செல்லுமுன் கடவுளை வணங்கி செல்லவும்.

2. ரிஷப ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

Priesthood benefits for Pisces zodiac pinit button
Image: Shutterstock

இந்த குருபெயர்ச்சியில் ரிஷப ராசிக்காரர்களின் ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகலாம். இந்த பாதிப்பு என்பது பெரும்பாலும் குடும்ப வாழ்க்கையை ஒன்றும் செய்யாது. வேலை மற்றும் தொழிலை பாதிக்க செய்யும். பொருளாதாரம் அடிபட நேரிடும் என்பதால் சிக்கனமாகவும் கவனமாகவும் இருக்க வேண்டிய காலமாக இது இருக்கலாம். அதன் பின் செப்டம்பர் 15 முதல் நவம்பர் 20 வரை நீங்கள் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். இந்த காலகட்டம் உங்களுக்கு இழந்தவைகளை மீட்டுத் தரும். அதிர்ஷ்டம் தேடி வரும். பணியில் இடமாற்றம் அல்லது பணி மாற்றம் வேண்டுபவர்களுக்கு அது நடக்கும். பெற்றோர் மற்றும் குடும்பத்தார் மகிழ்வு அதிகரிக்கும்.

பரிகாரம் : வியாழக்கிழமைகளில் அன்னதானம் செய்யுங்கள்

3. மிதுன ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

Priesthood benefits for Gemini zodiac pinit button
Image: Shutterstock

குருபெயர்ச்சியில் மிதுன ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட யோகங்களைப் பெறப் போகிறார்கள். வாழ்வில் வெற்றி, பணவரவு, குடும்ப நன்மை என பலப்பல நன்மைகள் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகிறது. பணவரவு அதிகரிக்கும். வருமானம் பலமடங்கு உயரும். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ளலாம். மாணவர்கள் படிப்பிற்கான இடமாற்றத்தைப் பெறுவார்கள். செப்டம்பர் 15க்கு பிறகு உங்கள் உடல்நலம் பாதிக்கப்படலாம். இருப்பினும் நவம்பர் 20க்கு பிறகு சிக்கல்கள் நீங்கி நன்மைகள் பெறுவீர்கள். தந்தை மற்றும் உறவினர் உடல்நலத்தில் கவனம் வைக்கவும்.

pinit button

பரிகாரம் : வியாழக்கிழமை விருட்ச வழிபாடு செய்யவும்.

4. கடக ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

Benefits of transmigration for the cross zodiac pinit button
Image: Shutterstock

இந்த குருபெயர்ச்சி கடக ராசிக்கு எட்டாவது இடத்தில் கடக்க இருப்பதால் சில எதிர்மறை பலன்களை நீங்கள் சந்திக்க நேரலாம். பணம் இழப்பு மற்றும் விரயங்கள் நேரும். குழந்தையின் அதிர்ஷ்டத்தால் குடும்ப வாழ்க்கை சீராக நடக்கும். வங்கி கடன்கள் கொஞ்சம் கை கொடுக்கும். பயணங்கள் தோல்வியில் முடியும். ஆனால் செப்டம்பர் 15க்கு பிறகு மிகப்பெரிய மாற்றங்கள் உண்டாகும். தொழில் வெற்றி, காரிய அனுகூலம், குடும்ப நன்மை என எல்லாம் நல்ல பலன்களாகவே நடக்கும். வருட இறுதியில் உங்கள் உடல்நலம் மீது கவனம் வேண்டும். காதல் வாழ்க்கை சுறுசுறுப்பாக இயங்கும்.

பரிகாரம் : பசுவிற்கு அகத்திக்கீரை கொடுக்கவும்

5. சிம்ம ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

Benefits of transmigration for Leo pinit button
Image: Shutterstock

இந்த குருபெயர்ச்சியில் குரு உங்கள் ஏழாவது வீட்டில் பெயர்ச்சி ஆகிறார். காதல் வாழ்க்கை அமோகமாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். மணமானவர்களின் இல்லறம் நல்லறமாகும். வாழ்க்கைத்துணை மற்றும் உங்கள் வருமானம் அதிகரிக்கும். மரியாதை மற்றும் வெகுமானங்கள் கிடைக்கும். செப்டம்பர் 15க்குப் பிறகு உங்களுக்கு உடல்நல பாதிப்புகள் நேரலாம். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். நினைத்தவரை மணக்கும் வாய்ப்புகள் உள்ளது. சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பரிகாரம் : அரச மரத்திற்கு நீர் ஊற்றி வரவும்.

6. கன்னி ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

Priesthood benefits for Virgo zodiac pinit button
Image: Shutterstock

இந்த குரு பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களைத் தரப்போகிறது. மாணவர்களுக்கு மட்டுமே நன்மையான காலமாக இது இருக்கலாம். மற்றவர்கள் உடல்நலம், பண நலம் போன்றவற்றால் பாதிக்கப்பட நேரிடும். திருமண வாழ்வும் சேதமாகலாம். சொத்து தகராறு ஏற்படவும் வாய்ப்புண்டு. ஆனால் செப்டம்பர் 15க்கு பிறகு இவையெல்லாம் தீர்ந்து நல்ல பலன்கள் ஆரம்பிக்கும். குறையாத வருமானம் கிடைக்கும். இருப்பினும் குடும்ப வாழ்க்கை மற்றும் உடல்நலத்தை கவனமாக அணுகவேண்டிய காலம் இது.

பரிகாரம் : குரு வாரம் பசுவிற்கு வெல்லம் அல்லது உணவு தானம் அளிக்கவும்.

7. துலா ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

Priesthood benefits for Libra pinit button
Image: Shutterstock

குருவானவர் உங்க ஐந்தாம் வீட்டில் பெயர்ச்சி அடைவதால் பல நன்மைகள் நீங்கள் பெறப் போகிறீர்கள். கல்வியில் மேன்மை பெறும் காலமாக இது இருக்கும். திருமண வாழ்க்கை பல ஆனந்தங்களை அள்ளிக் கொடுக்கும். பணப்பிரச்னைகள் எல்லாம் நீங்கி வருமானம் பல மடங்கு உயரப் போகிறது. குழந்தை பாக்கியம் கிடைக்கும். தனியான நபர்களுக்கு சரியான துணை அமையலாம். செப்டம்பர் 15 முதல் தாயார் உடல்நலம் மீது கவனம் தேவை. நவம்பர் 30க்கு பிறகு உங்கள் வாழ்வில் பல நன்மைகள் நடக்கும். பணியில் முன்னேற்றம் கிடக்கும். தொழில் நன்கு வளமை பெறும்.

பரிகாரம் : பசுவிற்கு உணவளிக்கவும்.

8. விருச்சிக ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

Priesthood benefits for Scorpio pinit button
Image: Shutterstock

குருவானவர் உங்கள் நான்காம் வீட்டில் பெயர்கிறார். இது சிறப்பான பலன்களைத் தராது. குடும்பத்தில்  சிக்கல்கள் உண்டாகும். குழந்தைகள் மற்றும் தாயின் உடல் நலம் காரணமாக பண விரயங்கள் ஏற்படும். பண நெருக்கடி உண்டாவதால் மன உளைச்சல் ஏற்படும். செப்டம்பர் 15க்கு பிறகு பயணங்களில் வெற்றி கிடைக்கும். ஆன்மீக தேடல் உண்டாகும். வருடத்தின் கடைசியில் குடும்பத்தில் உண்டான சிக்கல்கள் நீங்கி அமைதியாகும். பெரும் செல்வம் தேடி வரும். பணவிரயம் சுபவிரயமாக இருக்கும்.

பரிகாரம் : குரு வழிபாடு அமைதி தரும்.

9. தனுசு ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

Sagittarius zodiac benefits pinit button
Image: Shutterstock

குருவானவர் இந்த ஆண்டில் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் இடம் பெயர்கிறார். இதனால் பயணங்கள் அதிகரிக்கலாம். ஆன்மீக யாத்திரைகள் செல்ல நேரிடும். கடும் முயற்சி மற்றும் உழைப்பிற்கு பின்னரே பணவரவு இருக்கும். குடும்பத்தினர் உடல்நலம் பாதிக்கப்படலாம். செப்டம்பர் 15க்கு பிறகு கொஞ்சம் குடும்ப அமைதி மற்றும் வருமானம் கிடைக்கும் காலமாக இது இருக்கும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் என்றாலும் சோம்பல் அதிகரிக்கும். அதனால் உழைப்பு குறைந்து பணவரவு மீண்டும் பாதிக்கலாம். எனவே சோம்பல் இல்லாமல் இருக்கப் பழகுங்கள்.

பரிகாரம் : குரு பகவான் தரிசனம் நன்மை தரும்

10. மகர ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

Sagittarius benefits for Capricorn pinit button
Image: Shutterstock

குருவானவர் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் பெயர்கிறார். இந்த சூழ்நிலையில் வீட்டில் சுபநிழ்ச்சிகள் நடக்கலாம். வருமானம் உயரும். குடும்ப சுகம் பெருகும். வெளிநாடு தொடர்பான செய்திகள் வெற்றி தரும். மறுமணம் நடக்க வாய்ப்புண்டு. செப்டம்பர் 15க்கு பிறகு மனம் அமைதியாகவும் பேச்சு இனிமையாகவும் இருக்கும். இதனால் மற்றவர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். வருமானம் உயரும். உங்கள் உடல்நலத்தில் கவனம் தேவை/

பரிகாரம் : குருவாரத்தில் அன்னதானம் செய்யவும்

11. கும்ப ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

Priesthood benefits for Aquarius pinit button
Image: Shutterstock

குருவானவர் இந்த குருபெயர்ச்சியில் உங்கள் சொந்த லக்கினத்தில் அமர்கிறார். அதனால் காதல் மற்றும் திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். மன அழுத்தங்களுக்கு விடை கொடுக்கும் காலமாக இது இருக்கலாம். தெளிவான முடிவுகள் எடுக்கும் மனநிலை உண்டாகும். இருப்பினும் செப்டம்பர் 15க்கு பிறகு மீண்டும் சிக்கல்கள் உருவாகலாம். பணவிரயங்கள் உண்டாகும். உடல் நலம் பாதிக்கும். வருட இறுதிகளில் இழந்த நிம்மதியை மீண்டும் பெறுவீர்கள்.

பரிகாரம் : கல்வி உதவி செய்யலாம்.

12. மீன ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள்

Benefits of transmigration for Pisces pinit button
Image: Shutterstock

உங்கள் ராசியில் குரு நுழைகிறார் என்பதால் உங்கள் உடல் நலம் பாதிக்கப்படலாம். வெளிநாடு யோகங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. கடுமையான உழைப்பிற்கு பின்னரே லாபம் கிடைக்கும். பயணத்திற்கான காலமாக இது இருக்கும். பண விரயங்கள் ஏற்படும். இருப்பினும் செப்டம்பர் 15க்கு பிறகு இவை மாறும். வருமானம் பெருகும். உறவுகள் சுகம் தரும். காதல் வெற்றி பெறும். திருமணம் நடக்கும். உடல் நலம் சீராகும். எனினும் எதிரிகள் வெற்றி அடைவார்கள். ஆன்மீக சாதனை நன்மை தரும்.

பரிகாரம் : குரு பகவான் மந்திர வழிபாடு நன்மை தரும்.

Was this article helpful?
thumbsupthumbsdown

disqus_comment

Community Experiences

Join the conversation and become a part of our empowering community! Share your stories, experiences, and insights to connect with other beauty, lifestyle, and health enthusiasts.

Latest Articles