ஜுவாலா கட்டா விஷ்ணு விஷால் திருமணம்? – ஷங்கர் இயக்கத்தில் ரன்வீர் !

அசத்தல் காதல் கதை மற்றும் அதிரடி திரைக்கதை ஒரே திரையில் வெளியாகிறது!

Written by Deepa Lakshmi
Last Updated on

நடிகர் விஷ்ணு விஷால் மோஸ்ட் அண்டர் ரேட்டட் நடிகர் எனக் கூறப்படுபவர். இவரது நடிப்பு திறமையை இன்னமும் சரியான முறையில் தமிழ் இயக்குனர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை எனலாம். நீர்ப்பறவை போன்ற திரைப்படங்கள் அவருக்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்த உதவின .

ராட்சசன் திரைப்படம் மூலம் விஷ்ணு விஷாலுக்கு ஒரு திருப்பு முனை கிடைத்தது ( raatchasan movie ) . இருப்பினும் குடும்ப வாழ்வில் அவர் சில பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தது. விஷ்ணு விஷால் ரஜினி என்பவரை காதலித்து மணம் செய்தவர். இவருக்கு ஆர்யன் எனும் மகன் இருக்கிறான்.

இந்த நிலையில் கருத்து வேறுபாடுகள் இவரது காதலைக் கேள்விக்குறியாக்கவே இவர்கள் இருவரும் முறையாக விவாகரத்து செய்தனர். அந்த சமயங்களில் விஷ்ணு விஷால் சற்று குடிப்பழக்கத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளானதாக தெரிய வருகிறது.

அதே நேரத்தில் ஜ்வாலா கட்டாவின் நட்பு அவருக்கு சற்று ஆறுதலை தந்திருக்கலாம் போல. அடிக்கடி ஜ்வாலா உடனான புகைப்படங்களை வெளியிட்டாலும் நாங்கள் நண்பர்கள் மட்டுமே என்கிற வழக்கமான வார்த்தைகளைத்தான் அவரும் பயன்படுத்தினார் ( jwala gutta ) .

ராட்சசன் படத்தில் நடித்த அமலா பால் உடன் கிசுகிசுக்கப்பட்ட விஷ்ணு விஷால் அதன் பின்னர் தான் விவாகரத்தை நாடினார். எனவே அமலா பாலை இவர் திருமணம் செய்வார் என ஒரு சாரார் எதிர்பார்த்த நிலையில் ஜ்வாலா கட்டா நட்பு பற்றி விஷ்ணு விஷால் வெளிக்காட்ட ஆரம்பித்தார் ( vishnu vishaal ) .

ஜ்வாலா கட்டாவும் விஷ்ணு விஷாலும் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நிலையில் தற்போது தன்னுடைய திருமணச் செய்தியைக் கூறி இருக்கிறார் விஷ்ணு விஷால் (jwala gutta vishnu vishal wedding ) .

கடந்த மாதத்தில் விஷ்ணு விஷால் நடித்த காடன் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது, பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா உடன் நடித்த விஷ்ணு விஷால் படத்தின் வெற்றியின் போதே ஜ்வாலா கட்டா உடனான தனது திருமணம் பற்றி வெளிப்படையாக பேசி இருந்தார்.

Jwala Katta married Vishnu Vishal pinit button

இப்போது ஜ்வாலா கட்டாவின் பிறந்த நாளில் மோதிரம் அணிவித்து நிச்சயம் செய்ததாக புகைப்படங்களை வெளியிட்ட விஷ்ணு விஷால் அடுத்து அவர்களின் திருமண தேதியையும் கூறி இருக்கிறார். வருகின்ற ஏப்ரல் 22ம் தேதி இரண்டு குடும்பத்தாரின் ஆசிர்வாதத்துடன் இந்த திருமணம் நடக்க இருப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்திருக்கிறார்.

விஷ்ணு விஷால் திருமணம் செய்து கொள்ளப்போகும் ஜ்வாலா கட்டாவும் விவாகரத்து பெற்றவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பேட்மிண்டன் வீரர் சேத்தன் ஆனந்துடன் திருமணம் செய்த நிலையில் 2010ம் ஆண்டு அந்த திருமண வாழ்வில் இருந்து வெளியே வந்தவர் ஜ்வாலா கட்டா.

ஜ்வாலா கட்டா மற்றும் விஷ்ணு விஷால் இருவருமே தங்கள் கரியரில் பிசியாக இருக்கின்றனர். விஷ்ணு விஷால் கைவசம் எப் ஐ ஆர் , இன்று நேற்று நாளை – 2, மோகன்தாஸ் போன்ற திரைப்படங்கள் இருக்கின்றன. ஜ்வாலா கட்டா பேட்மிண்டன் அகாடமி கோச் ஆக இருக்கிறார்.

இவ்வளவு நாட்கள் நீங்கள் தந்த அன்பிற்கு நன்றி. இனி எங்களின் இந்தப் புதிய பயணத்திலும் உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம் என்று திருமணச் செய்தியை வெளியிட்டிருக்கிறார் விஷ்ணு விஷால் . மனம் போல வாழ்க மணமக்கள் .

Jwala Katta married Vishnu Vishal pinit button
Image: Instagram @thevishnuvishal

ரன்வீர் கபூர் மற்றும் சங்கர் இணைவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பாலிவுட்டில் படம் இயக்க போவதாக ஷங்கர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் ( ranveer kapoor and director shankar ) . முதல்வன் திரைப்படத்தை அனில் கபூர் மூலம் இந்தியில் இயக்கினார் சங்கர். நாயக் என்கிற அந்த இந்தி திரைப்படம் 2001ல் வெளியாகி வெற்றி பெற்றது.

அதற்கு பிறகு தற்போதுதான் மீண்டும் பாலிவுட்டிற்கு செல்வதாக சங்கர் கூறியிருக்கிறார். எந்திரன் 2.0 திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் அதிகமாக இருந்ததால் அடுத்த படம் பற்றிய சிந்தனை இல்லாமல் இருந்த சங்கர் மற்றொரு தெலுங்கு படத்தில் ராம் சரண் தேஜாவுடன் இணைந்ததாக செய்திகள் வந்தது. இதே திரைப்படத்தில் சிரஞ்சீவிகாருவும் இணைந்தார். இந்த திரைப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார் ( ram charan deja , chiranjeevi ) .

இதற்கிடையில் இந்தியன் 2 திரைப்படத்திற்கான வேலைகள் செய்த சங்கர் படப்பிடிப்பில் நடந்த ஒரு விபத்து மற்றும் கொரோனா காரணமாக இந்த படப்பிடிப்பை தள்ளி வைத்திருக்கிறார். லைகா நிறுவனம் ( lyca productions ) தற்போது இந்தியன் 2 படத்தயாரிப்பைக் கைப்பற்றி இருந்தாலும் ஆரம்பத்தில் இந்தியன் 2 திரைப்படத்தை தயாரிக்க இருந்தவர் தில் ராஜு ( dhil raju ) என்பது குறிப்பிடத்தக்கது.

Jwala Katta married Vishnu Vishal1 pinit button

ஷங்கரின் அந்நியன் திரைப்படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு சமூகக் கருத்தையும் சமூகம் செல்லும் பாதை எங்கெல்லாம் தவறானது எனவும் சுட்டிக் காட்டிக் கொண்டே இருப்பதில் இயக்குனர் ஷங்கருக்கு நிகர் யாருமில்லை எனலாம்.

அப்படி அனைவர் மனதிலும் பதிந்து அனைவராலும் பாராட்டப்பட்ட திரைப்படம்தான் அந்நியன் ( anniyan movie ) . சமூகம் எனப்படும் தனித்தனி மனிதர்கள் செய்யும் சிறு தவறுகள் சிறு அலட்சியங்களால் பெரும் உயிர் சேதங்கள் நடைபெறுவது குறித்தும் அதனைத் தடுக்கும் மல்டிபர்சனாலிட்டி டிஸார்டர் கொண்ட நாயகன் ( multi personality disorder ) பற்றியும் அந்நியன் விரிவாக அலசியது.

இதில் நாயகனாக விக்ரம் நடித்து தன்னுடைய நடிப்பில் மற்றொரு மைல்கல்லை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே திரைப்படத்தை தான் இயக்குனர் ஷங்கர் தற்போது பாலிவுட்டில் இயக்கவிருக்கிறார். இதில் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை பென் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

வருகின்ற 2025ல் இருந்து இதற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துறுதுறுப்பான ரன்வீரின் மற்றொரு பரிமாணத்தை இந்தத் திரைப்படம் மூலம் பார்க்க திரை உலகம் காத்துக் கொண்டிருக்கிறது.

Was this article helpful?
thumbsupthumbsdown

disqus_comment

Community Experiences

Join the conversation and become a part of our empowering community! Share your stories, experiences, and insights to connect with other beauty, lifestyle, and health enthusiasts.

Latest Articles