நயன்தாராக்கு என்ன ஆச்சு .. சொந்த ஊருக்குப் பறந்த தீபிகா படுகோன் ரன்வீர் சிங் !

பிரபல ஜோடியின் அசாத்திய பயணம் மற்றும் அவர்களின் சொந்த மகிழ்ச்சிகள்!

Written by Deepa Lakshmi
Last Updated on

நயன்தாரா .. அறிமுகம் தேவையற்ற ஒரு இரும்பு பெண்மணி. பலவிதமான அவமானங்களைத் தாங்கி கொண்டு முன்னேறிக் கொண்டே இருந்தவர்.. இருக்கிறவர். வயது ஏறினாலும் என்றும் இளமையைத் தக்க வைத்துக் கொள்வதில் வல்லவர்.

சமீப காலமாக இவர் இயக்குனர் விக்னேஷ் ஷிவனை காதலித்து வருவது உலகம் அறிந்த ஒன்றுதான் என்றாலும்.. இவர்கள் அப்டேட் செய்யும் புகைப்படங்களுக்காகவே பல லட்சம் ரசிகர்கள் தவம் இருக்கின்றனர். நாடு நாடாக சென்று செல்பி எடுக்கும் ஹாபி கொண்ட இந்தக் காதல் ஜோடி தற்போது ஒரு திரைப்படத்திலும் ஒன்றாக வேலை செய்து வருகின்றனர் ( nayanthara vignesh shivan ) .

விக்னேஷ் சிவன் நல்லதொரு இயக்குனர் மற்றும் கவிஞர் என்றும் கூடச் சொல்லலாம். நயன்தாராவின் ரசிகராக இருந்து காதலராக மாறி இருப்பார் போல என நினைக்கும்படி நயன்தாராவை விதம் விதமாக அழகழகாக அதே நேரம் தன்னுடைய புகைப்படத் திறமையை வெளிக்காட்டுபவராக அதன் மூலம் தங்கள் காதலை நிலைநிறுத்துபவராக இருக்கிறார்.

சில வருடங்களாக செல்பிக்கள் போட்ட நிலையில் எப்போது திருமணம் என்று நச்சரிக்க ஆரம்பித்தனர் ரசிகர்கள். எங்கள் காதல் போர் அடிக்கும்போது தான் திருமணம் செய்வோம் என்று விக்னேஷ் ஷிவன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால் பார்க்கும் ரசிகர்களுக்கே இவர்களது காதல் போர் அடித்து விடும் அளவிற்கு செல்பிக்களால் நிரம்பிய உலகமாக இருக்கிறது இவர்கள் இன்ஸ்டா பக்கங்கள் ( nayanthara loves vignesh shivar ).

nayanthara-puthiya-update-deepveer-bangalore-visit-in-tamil pinit button
Image: Source

இந்த நிலையில் கொரோனா தந்த புண்ணியத்தால் இந்த வெளிநாட்டு சுற்றுலா புகைப்படங்கள் சில காலமாக வராமல் இருக்கவே நயன்தாராவின் பர்சனல் அப்டேட் கிடைக்காமல் ரசிகர்கள் வருந்தி வந்தனர்.

நயன்தாரா அடிப்படையில் ஒரு கிரிஸ்துவர் என்றாலும் அவர் மதங்களுக்குள் ஒருபோதும் சிக்காத பெண்ணாகவும் அதனை அனைவருக்கும் தெரிவிக்கும் தைரியம் உள்ளவராகவும் இருந்து வருகிறார். திருப்பதி கோயில் முதல் பல கோயில் தரிசனங்களை அவர் பக்தியோடு செய்வதை செய்திகளில் பார்த்திருக்கிறோம். அதனால் தானோ என்னவோ லாஜிக் இல்லாவிட்டாலும் மூக்குத்தி அம்மன் படத்தில் தான் அம்மனாக நடிக்க ஒப்பு கொண்டிருப்பார் போலும்.

தற்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் விஷு கொண்டாட்டத்திற்காக தன்னுடைய வீட்டிற்கு சென்றுள்ளார் நயன்தாரா. தனி விமானம் மூலம் இவர்கள் பறந்து கேரளா சென்றது வைரலானது. ஓணம்  பண்டிகையின் போதும் இது நடந்த ஒன்றுதான்.

கேரளா சென்ற நயன்தாரா விக்னேஷ் ஷிவன் ஜோடி தங்களின் விஷுக்கனி கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்கள். நயன்தாரா தனியாக உள்ள புகைப்படம் என்றாலும் மிக எளிமையான வெண்மை நிற புடவையில் கொண்டையில் மல்லிகை அணிந்து பார்க்க அசல் கேரளப்பெண்ணாக ( நிஜத்திலும் தான் ) மாறி இருக்கிறார் ( nayanthara latest  update ) .

இதனை நயன்தாரா அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட அதனைப் பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனராம். காரணம் இருக்க இருக்க இளைத்துக் கொண்டே போகும் நயன்தாராவின் உடல் வாகு பற்றித் தான் அவர்கள் கவலைப்படுகிறார்களாம். என்னதான் ஆச்சு நம்ம நயன்தாராவுக்கு என்று முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

நயன்தாராவின் வயது முதிர்வு வெளியே தெரிய ஆரம்பித்திருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் ஒரு பெண்ணின் அழகை சரியாக எடுத்துக் காட்டுவது புகைப்படத்தின் கோணங்கள் தான். ஒருவேளை தவறாக வைக்கப்பட்ட கேமரா ஆங்கிள் காரணமாக இது வெளிப்பட்டிருக்கலாம்.

nayanthara-puthiya-update-deepveer-bangalore-visit-in-tamil pinit button
Image: Source

ஆனால் அவரது க்ளோயிங் ஸ்கின் அப்படியேதான் இருக்கிறது ( nayanthara skin secrets ) . மிக லேசான மேக்கப் என்பதால் இந்த தோற்றம் வந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் இதற்கு மேலும் இளைத்து போனால் நயன்தாரா தன்னுடைய கார்ஜியஸ் லுக்கை இழந்து விடுவார் என்றே தோன்றுகிறது. அடுத்த புகைப்படத்தில் அழகை ஏற்றி காட்டுங்கள் நயன்தாரா என ரசிகர்கள் சொன்னாலும் அவர் இரும்பு மனுஷி ஆயிற்றே எதற்கும் கவலைப்பட மாட்டார். காரணம் கைவசம் அண்ணாத்த , காத்து வாக்குல ரெண்டு காதல், நிழல் எனும் படங்கள் இருக்கின்றன.

அவை வெளியாகும்போது ஸ்க்ரீனில் தன்னுடைய வழக்கமான தோற்றம் தொடரும் என அவர் நம்புவதால் இந்த புகைப்படங்களைப் பற்றி அவர் கண்டு கொள்ளப் போவதில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது

nayanthara-puthiya-update-deepveer-bangalore-visit-in-tamil pinit button
Image: Source

மகாராஷ்டிராவில் 15 நாள் ஊரடங்கு உத்தரவு தொடங்கிய நிலையில் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங்  ஜோடி பெங்களூருக்கு பறந்ததாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் ஊரடங்கு உத்தரவுக்கு முன்னால், பாலிவுட்டின் நட்சத்திர ஜோடி மற்றும் நடிகர்கள் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் மும்பை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு சென்றனர்.  இந்த ஜோடி அடுத்த சில நாட்களை தீபிகாவின் சொந்த ஊரான பெங்களூரில் கழிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது #deepveer.

இந்த ஜோடி தீபிகாவின் பெற்றோர்களான பிரகாஷ் மற்றும் உஜ்ஜலா படுகோனுடன் சில தரமான நேரத்தை செலவிட பெங்களூருக்கு சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிகின்றன. தீபிகா படுகோனின் சொந்த ஊரிலும் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில், அங்கு செல்வதற்கான கட்டுப்பாடு அவ்வளவு கடுமையானதல்ல என்றும்  கர்நாடகாவின் பல பகுதிகள் ஏப்ரல் 20 வரை இரவு ஊரடங்கு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளன என்பதால் அவர்கள் அங்கே செல்கிறார்கள் ( deepika ranveer in bangalore )

அவர்கள் ஒன்றாக ஒரே நிறத்தில் உடை அணிந்திருந்தது தற்போது வைரல் செய்தியாக மாறி வருகிறது. ரன்வீரின் freak style உடைகளை மாற்ற தீபிகா இப்படி ஒரு தந்திரம் செய்திருக்கலாம் என்றே நமக்குத் தோன்றுகிறது !

nayanthara-puthiya-update-deepveer-bangalore-visit-in-tamil pinit button
Image: Source

இதற்கிடையில், மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில், தொடர்ந்து வளர்ந்து வரும் கொரோனா தொற்றுநோயால் சினிமா ஷூட்டிங் அனைத்தும் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன. அவசரகால சேவைகளைத் தவிர அடுத்த இரண்டு வாரங்களுக்கு மாநிலத்தில் எந்த இயக்கமும் அனுமதிக்கப்படாது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மாநில அரசாங்கத்தால் இந்த கடுமையான நடவடிக்கைகள் விதிக்கப்பட்ட பின்னர், பல திரைப்படத் தயாரிப்பாளர்கள் இப்போதைக்கு மாநிலத்திற்கு வெளியே படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளனர்.

“இது ஒரு 15 நாள் லாக் டவுன் மட்டுமே என்றாலும், கோவிட் -19 வழக்குகள் அதிகரித்துள்ளதால் மக்கள் இதன் நீட்சிக்கும்  தயாராகி வருகின்றனர். எனவே, கோல்கா, கொல்கத்தாவில் பல படங்கள் ஷூட்டிங் தொடரும், ஷாருக் கான் நடித்த பதான், அமிதாப் பச்சனின் குட்பை மற்றும் சல்மான் கானின் டைகர் 3 போன்ற படங்கள் செவ்வாய்க்கிழமை முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்ததைத் தொடர்ந்து படப்பிடிப்பை நிறுத்த வேண்டியிருந்தது ( curfew in maharashtra ) .

ஆகவே எல்லாவற்றிற்கும் தயாராகவே தீபிகா ரன்வீர் ஜோடி பெங்களூரு சென்றுள்ளனர். பணி முன்னணியில், தீபிகா படுகோனே அடுத்து அதிரடி ஃபைட்டரில் ஹிருத்திக் ரோஷனுடன் நடிப்பார். ஷாகுன் பாத்ராவின் காதல் அடிப்படை கொண்ட கதை  மற்றும் தி இன்டர்ன் இந்தி ரீமேக் ஆகியவை முன் தயாரிப்பு பணிகளில் உள்ளன. தீபிகாவின் கணவர் ரன்வீர் புதன்கிழமை ஷங்கருடனான தனது புதிய திரைப்படத்திற்கு  தயாரானதை அறிவித்தார்,மற்றும்  83 வெளியீட்டிற்கு தயாராக உள்ளார். அவர் ரோஹித் ஷெட்டியின் சர்க்கஸ் மற்றும் ஒய்.ஆர்.எஃப் இன் ஜெயேஷ்பாய் ஜோர்டார் ஆகியவற்றிலும் பணிபுரிகிறார் (lock down in maharashtra ).

nayanthara-puthiya-update-deepveer-bangalore-visit-in-tamil pinit button
Image: Source

நடிகர்கள் என்றாலும் அவர்களுக்கும் நம்மைப் போன்ற சாதாரண உணர்வுகள் தான் இருக்கிறது என்பதாலேயே தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாரும் வட இந்திய சூப்பர் லேடியும் தங்கள் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க சொந்த ஊர் சென்றிருக்கின்றனர். என்னதான் அணு குடும்பங்கள் வெற்றியடைந்தாலும் கூட கிடைத்த வெற்றியைக் கொண்டாட அதனைப் பகிர நாம் ஓடிச் செல்வது உறவுகளிடம் தான் என்பதை நாமும் மறக்காமல் இருப்போம்.

Was this article helpful?
thumbsupthumbsdown

disqus_comment

In This Article

Community Experiences

Join the conversation and become a part of our empowering community! Share your stories, experiences, and insights to connect with other beauty, lifestyle, and health enthusiasts.

Latest Articles