உங்கள் கர்மாவை சரி செய்ய ஒரு வாய்ப்பு.. பிறந்த தேதி அடிப்படையில் உங்கள் முன் ஜென்ம பலன்கள் – Numerology predictions in tamil


by Deepa Lakshmi

இந்த ஜென்மத்தில் நாம் என்ன செய்கிறோம் என்கிற விழிப்புணர்வே நம்மில் பல பேருக்கு இருப்பது இல்லை. இதில் முன்ஜென்மத்தை அறிந்து நமக்கு என்ன லாபம் என்று பலர் யோசிக்கலாம் Numerology predictions in tamil.

ஆரம்பத்தில் எனக்கும் அப்படித்தான் தோன்றியது, ஆனால் இதன் பலன்கள் எனக்கு மிக சரியாகப் பொருந்தி போனதால் உங்களோடு இந்த பலன்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இங்கே எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையது தான். நமது சிறிய கைதட்டல் ஓசை கூட பலருக்கு பல மாற்றங்களைக் கொடுக்கும்.

இதன் இன்னொரு பாஷை தான் பட்டாம்பூச்சி தியரி – கேயாஸ். இதற்கான தமிழ் அர்த்தம் என்று தேடினால் குழப்பம் என்று கூகிள் காட்டுகிறது. உண்மையில் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற ஒவ்வொன்றும் ஒழுங்கற்றும் ஒழுங்கோடும் செய்யும் பலவித செயல்களால் தான் இந்த உலகம் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளும்படி நடந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு பிறப்பின் ரகசியமும் இதில் இருந்து தான் தொடங்குகிறது. உங்கள் வாழ்வின் ஆரம்பம் எங்கிருந்து தொடங்குகிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டால் உங்கள் நிகழ்காலம் மற்றும் எதிர்காலங்கள் உங்களுக்கு கண்ணாடி போல காட்டப்படும் Karma predictions in tamil.

அதன் அடிப்படையில் இந்த முன்ஜென்ம பலன்கள் இங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன. இது உங்களின் இந்த ஜென்ம தொடர்புகளை விளக்கலாம். நம் வாழ்வின் நன்மை தீமைகளுக்கு என்ன காரணம் என்பதும் அதற்கான தீர்வுகளும் இதன் மூலம் நடக்கலாம். பலன்களை படிக்க படிக்கச் உங்கள் ஆச்சர்யங்கள் அதிகமாகலாம்.

பிறந்த தேதி 1 (1,10,19,28)

Numerology predictions in tamil

iStock

முற்பிறவிகளில் நீங்கள் உங்கள் ஆத்மாவை அதீத தாகத்தோடும் பசியோடும் அலைய விட்டிருக்கிறீர்கள். உங்களுடைய சுய தியாகங்கள் மூலம் மற்றவர்களை மகிழ்வித்திருப்பீர்கள். உங்களுடைய முழுமை தன்மை பற்றி நீங்கள் அறிந்தது இல்லை. உங்களை பற்றி நீங்கள் குறைவாகவே எடை போட்டிருப்பீர்கள்.

இந்தப் பிறவி உங்கள் போன ஜென்மத்தின் மீதமுள்ள ஏக்கம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்வின் முழுமையை நீங்கள் உணர முயற்சியுங்கள். உங்கள் ஆத்மாவின் வார்த்தைகளை ஆழ்மனதின் குரலைக் கண்டடையுங்கள். அமைதி உங்களோடு பயணிக்கும்.

பிறந்த தேதி 2 (2,20,29)

Numerology predictions in tamil

iStock

போன பிறவியில் நீங்கள் குடும்ப சந்தோஷங்களைத் தேடும் முயற்சிகளில் இருந்திருப்பீர்கள். பொருள் தேடி ஓடிக்கொண்டே இருந்து உங்கள் ஒவ்வொரு சொத்தையும் சிரமப்பட்டு சம்பாதித்து சேர்த்திருப்பீர்கள்.

அதன் பின்னர் உங்கள் இறப்பு நிகழ்ந்திருக்கலாம். அதனால் நீங்கள் மீண்டும் இங்கே இருக்கிறீர்கள். உங்கள் முற்பிறவி previous birth உங்களுக்குச் சொல்லித் தந்த பாடம் தேடித் தேடி பொருள் சேர்த்தாலும் இறுதியில் அடங்கியது ஆறடி மண்ணோ அல்லது ஒரு பிடி சாம்பலோதான். பொருள் சேர்த்தலைத் தாண்டி இந்த உலகில் நீங்கள் கற்றுக்கொள்ள இன்னும் என்னென்ன இருக்கிறது என்று ஆராயுங்கள். உங்கள் தேடலில் மகிழ்ச்சி அடையுங்கள்.

பிறந்த தேதி 3 (3,12, 21,30)

Numerology predictions in tamil

iStock

உங்களுடைய முற்பிறவியிலும் சரி, இந்தப் பிறவியின் ஆரம்ப காலத்திலும் சரி உங்களால் ஒருபோதும் வெளிப்படையாக பேச முடியாது .உங்களை சூழ்ந்துள்ள பயம் காரணமாக மன படபடப்பு , அசௌகர்யம் கொண்ட நிலைமை,தன்மானம் இழந்திருப்பது போன்ற விஷயங்கள் நடந்திருக்கும்.

முன் ஜென்மத்தில் ஏதோ ஒரு சமூக நிர்ப்பந்தம் காரணமாக நீங்கள் உங்கள் தனித்துவத்தை வெளிக்காட்ட முடியாமல் போயிருக்கலாம். இந்த ஜென்மத்தில் நீங்கள் அந்தக் குறையை நீக்குங்கள். மற்றவர்களிடம் தைரியமாக மனம் திறந்து பேசுங்கள் free numerology predictions.

பிறந்த தேதி 4 (4,13,22,31)

Numerology predictions in tamil

iStock

உங்கள் முற்பிறவியில் நீங்கள் சந்தோஷமாக இல்லை உங்கள் பாரம்பரிய வழக்கங்கள் உங்களை மற்றவரிடம் இருந்து பிரித்து வைத்ததால் எல்லோரும் இருந்தும் தனித்திருப்பீர்கள். உங்களுக்கான சந்தோஷங்கள் எல்லாம் சாஸ்திரத்தின் பெயரால் தடை செய்யப்பட்டிருப்பதை உணர்ந்திருப்பீர்கள்.

இந்த பிறவி நீங்கள் இழந்தவர்களை மீட்டெடுக்க பயன்பட வேண்டும். நீங்கள் அனைவரிடமும் அன்போடு இருங்கள். நீங்கள் எதைக் கொடுக்கிறீர்களோ அதையே பெறுவீர்கள். எனவே அன்பை மட்டுமே கொடுங்கள். அளவற்ற பேரன்பு உங்களிடம் மண்டியிடும்.

பிறந்த தேதி 5 (5,14,23)

Numerology predictions in tamil

iStock

முற்பிறவியில் கொஞ்சம் சுயநலம் சந்தர்ப்பவாதம் தேவைக்காக பழகுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு அடுத்தவர்களின் உழைப்பில் நீங்கள் இன்பம் காண்பவராக இருந்திருப்பீர்கள். உங்களுக்கு ப்ரயோஜனப்படாதவர்களை நீங்கள் அலட்சியப்படுத்தி இருக்கிறீர்கள்.

இந்தப் பிறவியானது உங்கள் தவறுகளைத் திருத்துவதற்காகத் தரப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு கணக்கு பார்க்காமல் உதவி செய்யுங்கள். உங்கள் சுயநல எண்ணங்களைத் தூய்மைப்படுத்தி உங்களைப் பற்றி நீங்கள் உயர்வாக நினைக்கும் படியான ஒரு வாழ்க்கையை வாழுங்கள் free numerology predictions by date of birth.

பிறந்த தேதி 6 (6,15,24)

Numerology predictions in tamil

iStock

போன பிறவி முழுதும் நீங்கள் நோயால் வாடி இருப்பீர்கள். இதன் பக்க விளைவாக ஏறி இறங்கும் மனநிலை மாற்றங்கள், உணர்வு ரீதியான குழப்பங்கள் போன்றவை உங்களுக்கு இருந்திருக்கும். போன பிறவியில் உங்கள் குடும்பத்தின் அன்புக்காக ஏங்கி இருப்பீர்கள்.

இந்த பிறவியில் நீங்கள் சமநிலைக்கு வர வேண்டும். உங்களை நீங்களே முதலில் நேசிக்க வேண்டும் உங்களை நீங்களே கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் உள்ளம் சொல்வதை செவிமடுங்கள். மன அமைதிக்கு ஆன்மிகம் தேடுங்கள். இவற்றை நீங்கள் முயற்சிக்காவிட்டால் போதை பழக்கங்களுக்கு அடிமை ஆக நேரிடும்.

பிறந்த தேதி 7 (7, 16,25)

Numerology predictions in tamil

iStock

போன ஜென்மத்தில் நீங்கள் எதற்கெடுத்தாலும் யாரோடும் போட்டி போடும் மனநிலையில் இருக்கலாம். இதற்கு உங்களுக்கு தரப்பட்ட அதீத சுதந்திரம் காரணமாக இருக்கலாம். இருப்பினும் இந்த பிறவி உங்களுக்கு அவசியம் அற்றது என்றாலும் இணைந்து வாழும் தன்மை பற்றி நீங்கள் அறிந்து கொள்ளவே இந்த ஜென்மம் தரப்பட்டுள்ளது.

போன பிறவியில் தவற விட்டதை இப்போது கற்றுக் கொள்ளுங்கள். இந்த பூமியில் நீங்கள் கருணையை விதைக்க வேண்டும். அடுத்தவர்களோடு இணக்கமாக இருக்க வேண்டும். அதற்கு உங்களிடம் தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்தாமல் இருங்கள்.

பிறந்த தேதி 8 (8,17,26)

Numerology predictions in tamil

iStock

இந்த எண்ணில் பிறந்தவர்களின் தங்களின் பூர்வ ஜென்ம வாழ்க்கையில் தங்களுக்கான பொறுப்புகளை ஏற்க மறுத்திருப்பார்கள். இதன் தொடர்ச்சியாக இப்போதும் கூட பொறுப்பற்ற நிலையில் உங்கள் ஆரம்ப கால வாழ்க்கை அமைந்திருக்கலாம். அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையின் தன்மையைக் கூட நீங்கள் உங்களின் தனி பார்வையில் தனி கண்ணோட்டத்தில் தான் காண்பீர்கள்.

இந்தப் பிறவியில் கற்பனைகள் மற்றும் மாயைகள் பின் ஓடாதீர்கள். மற்றவர்கள் முன்னேற்றி விட நீங்கள் நகர்ந்து செல்லாமல் நீங்களாகவே நகர்ந்து செல்கிறீர்கள். அடுத்தவர்களின் உதவியற்ற போதும் உங்களை நீங்களே கண்டறிவதுதான் இந்த பிறவியின் நோக்கம். உங்கள் வாழ்வின் பிறப்பின் அர்த்தங்களைக் கண்டுபிடியுங்கள். தெய்வங்களுடன் இணையுங்கள்.

பிறந்த எண் 9 (9, 18, 27)

Numerology predictions in tamil

iStock

போன ஜென்மத்தில் உங்களுக்கு நடந்தவைகளில் பெரும்பாலும் கெடுதல்கள் தான் அதிகமாக இருந்திருக்கும். அதனால் நீங்கள் மற்றவர்களால் அடக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்திருப்பீர்கள். ரத்தக் கறை நிறைந்த சூழலில் போர், மரணம், நாகரிகமற்ற நிலைமை போன்ற காலங்களில் நீங்கள் வாழ்ந்திருக்கலாம்.

நீங்கள் முன்பு வாழ்ந்த சூழல் உங்களுக்கு ஏற்றதல்ல என்பதை நீங்கள் உணர்ந்ததால் மட்டுமே உங்களுக்கு மீண்டும் வாழ ஒரு சந்தர்ப்பம் தரப்பட்டிருக்கிறது. போன ஜென்மத்தின் கசப்புகளை மறந்து இந்த உலகின் அழகியல், மகிழ்ச்சி , ஆளுமை போன்றவற்றை அனுபவிக்கவே நீங்கள் பிறந்திருக்கிறீர்கள் . எவ்வளவு கடினமான காலங்கள் வந்தாலும் நேர்மறையான வாழ்வை வாழ வேண்டும் என்று நீங்கள் மற்றவர்களுக்குக் கற்றுத் தருவீர்கள்.

Was this article helpful?
The following two tabs change content below.
scorecardresearch