மூன்றே மாதங்களில் பிரசவத் தழும்புகள் நீங்க சில ரகசிய குறிப்புகள் !

இந்த குறிப்புகள் மூலம் உடல்நிலை மேம்படுத்து, வேகமாக சிகிச்சை பெறுங்கள்!

Written by Deepa Lakshmi
Last Updated on

கர்ப்ப காலங்களில் பெண்கள் உடலில் ஏற்படும் சில நிரந்தர மாற்றங்கள் அவர்களுக்கு கவலை தருகிறது. குழந்தைப் பிறப்பு என்பது கொண்டாடப்பட வேண்டிய விஷயம் என்றாலும் அதற்கு இணையாக பெண்கள் விட்டுக் கொடுக்கும் விஷயங்கள் மிக அதிகம்.

pinit button

அவர்களின் அழகான தட்டையான வயிறு இனி லேசாக பெருத்திருக்கும்.. அவர்களின் பட்டுப்போன்ற மென்மையான சருமம் லேசான சிராய்ப்பு மற்றும் நிரந்தரமான தழும்புகளோடும் இருக்கும் (strech marks ).

கர்ப்ப காலத்தில் வயிறு குழந்தைக்கு இடம் ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதனால் நமது சருமம் விரிவடையத் தொடங்குகிறது. குழந்தைப் பிறப்புக்கு பின்னர் அது உடனடியாக சுருங்குவதால் சருமத்தில் ஸ்ட்ரெச் மார்க் மற்றும் தழும்புகள் உண்டாகின்றன ( how to remove pregnancy marks ) .

அதனால் பிரசவத்திற்கு பின்னர் புடவை அணிந்தாலும் இந்தத் தழும்புகள் தெரியாமல் கட்ட வேண்டி வருகிறது. இதற்காகவே சந்தையில் பல அழகு சாதனப் பொருள்கள் விற்பனையாகின்றன. அவற்றை பயன்படுத்தினாலும் அவ்வளவு சீக்கிரம் தீர்வுகள் கிடைப்பதில்லை.

பிரசவத் தழும்புகள் நீங்க சில ரகசிய குறிப்புகள்

பொதுவாக சருமம் தனக்கு ஏற்படும் சிக்கல்கள் குணமடைய நிறைய காலம் எடுத்துக்கொள்கிறது. அதிலும் பிரசவம் என்பது பெண்கள் கடந்து வரும் முக்கியமான உடல் நிலை. எனவே இதற்கான பலன்களை நீங்கள் உடனடியாக எதிர்ப்பார்ப்பது தவறானது. பிரசவ காலம் போலவே இந்தத் தழும்புகளை போக்கும் காலமும் சில மாதம் நீடிக்கலாம் (how to remove stretch marks in tamil).

தேங்காய் எண்ணெய்

prasava-thazhumbukal-neenga-kurippukal-in-tamil pinit button
Image: IStock

நாம் அன்றாடம் தலைமுடி வளரப் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் எப்படி உங்கள் ப்ரசவத் தழும்புகளை மறைய வைக்க முடியும் என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம். ஆனால் உண்மையில் நீங்கள் தேங்காய் எண்ணெயை குழந்தை வயிற்றில் இருக்கும்போதே பயன்படுத்தி வரலாம். தினமும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவுவதன் மூலம் சருமம் விரிவடைந்தால் ஏற்படும் அரிப்புகள் முதற்கொண்டு நீங்க முடியும். தழும்புகள் உண்டான பின்னர் தினமும் ஒரு நாளைக்கு மூன்று முறை தேங்காய் எண்ணையை உங்கள் வயிறு மற்றும் தொடைப்பகுதியில் தடவி மசாஜ் செய்யுங்கள். இப்படி செய்வதால் ஒரு சில மாதங்களில் தழும்புகள் மறைய ஆரம்பிக்கும் (coconut oil for stretch mark ).

ஆப்ரிகாட் மாஸ்க்

prasava-thazhumbukal-neenga-kurippukal-in-tamil pinit button
Image: IStock

ஆப்ரிகாட் சருமத்தின் நண்பன். உலர்ந்த ஆப்ரிகாட் அல்லது புதிய ஆப்ரிகாட் பழங்கள் இதற்கு போதுமானது. ஆப்ரிகாட் பழங்களில் உள்ள விதைகளை நீக்கி விட்டு நீங்கள் தழும்பு உள்ள பகுதிகளில் தடவ வேண்டும். இதற்கு பதில் ஆப்ரிகாட் எசன்ஷியல் எண்ணெய் போன்றவற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம். தினமும் ஒரு முறை இதனை தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். குளிப்பதற்கு முன்பான சமயம் பொருத்தமானது (apricot mask for stretch mark).

வைட்டமின் ஈ ஆயில் மற்றும் சர்க்கரை

prasava-thazhumbukal-neenga-kurippukal-in-tamil pinit button
Image: IStock

சருமத்தில் உண்டாகும் ப்ரஸவத் தழும்புகள் மறைய சர்க்கரை, எலுமிச்சை மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய் ஆகியவற்றை கலந்து அவ்விடங்களில் பூசவும். அதிக அழுத்தம் கொடுக்காமல் லேசாக ஸ்க்ரப் செய்து 15 நிமிடங்கள் உலர விடுங்கள். பின்னர் உங்கள் சருமத்தோடு சருமமாக தழும்புகள் காணாமல் போவதை நீங்கள் காண்பீர்கள் (vitamin e for stretch mark).

தக்காளி சாஸ்

prasava-thazhumbukal-neenga-kurippukal-in-tamil pinit button
Image: IStock

தக்காளியில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள் நம் சருமத்திற்கு பொலிவு மற்றும் பளபளப்பைத் தரும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதுவே அதிகப்படியான திக்கான தக்காளி சாஸும் செய்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ? உண்மையில் தக்காளியை விட தக்காளி சாஸ் வீரியம் உடையது. காரமற்ற தக்காளி சாஸ் எடுத்து உங்கள் தழும்புகள் மேல் தடவி இரவு முழுதும் ஊற விட்டு பின்னர் கழுவி விடவும். தழும்புகள் விரைவில் மறையும் (tomato sauce for strech mark ) .

கற்றாழை

prasava-thazhumbukal-neenga-kurippukal-in-tamil pinit button
Image: IStock

கற்றாழை மருத்துவ உலகில் ஒரு ஆல்ரவுண்டர் என்பது இப்போது சிறு குழந்தைக்கும் தெரிந்த ரகசியமாக இருக்கிறது. எனவே ஜில்லென்றிருக்கும் கற்றாழை ஜெல்களை உங்கள் பிரசவத் தழும்புகள் மீது தடவி 15 நிமிடங்கள் உலர விடுங்கள். பின்னர் துடைத்து விட்டு மாய்ச்சுரைசர் ஒன்றை பயன்படுத்தி வாருங்கள். விரைவான நாட்களில் இது பலன் தரும். அதிக பட்சமாக மூன்று மாதங்களில் உங்கள் பிரசவத் தழும்புகள் மறைந்து விடும் (aloe vera for strech marks ).

கோகோ பட்டர்

prasava-thazhumbukal-neenga-kurippukal-in-tamil pinit button
Image: IStock

இப்போது பல பாடி லோஷன்கள் மற்றும் லிக்விட் சோப் வகைகளில் கோகோ பட்டர் அதிகம் சேர்க்கப்படுகிறது. உங்கள் சருமத்தை மென்மையாகவும் பளபளப்பாகவும் வைப்பதில் கோகோ பட்டர் பல அற்புதங்கள் செய்கிறது. உங்கள் குழந்தை வயிற்றில் இருக்கும்போதே இந்த கோகோபட்டரை வயிற்றின் மீது தடவி வரலாம். அதிகமாக தடவினால் குழந்தைக்கு பாதிப்பு நேரும். அளவாக பயன்படுத்துங்கள். குழந்தைப் பிறப்புக்கு பிறகு இந்த கோகோபட்டரை தினமும் மூன்று முறை மசாஜ் செய்து வரவும் . வெகு விரைவில் தழும்புகளை டாடா சொல்லி விடலாம் ( coco butter for removing stech marks ).

இங்கே குறிப்புட்டுள்ள குறிப்புகள் உடனடியாக செயல்படாது. ஒரு நாளைக்கு இரண்டு முறை இதனைத் தொடர்ந்து செய்து வந்தால் மூன்று மாதங்களில் உங்கள் தழும்புகள் காணாமல் போகக் கூடும். அதிக பட்சமாக ஆறுமாதங்கள் எடுக்கலாம். உங்கள் உடல் வாகினை பொறுத்து தாமதங்கள் நேரலாம்.

Was this article helpful?
thumbsupthumbsdown

disqus_comment

Community Experiences

Join the conversation and become a part of our empowering community! Share your stories, experiences, and insights to connect with other beauty, lifestyle, and health enthusiasts.

Latest Articles