SkinKraft’s #Iammytype .. உங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்.. மற்றவரின் அனுமதிக்காக காத்திருக்காதீர்கள் !
Embrace your unique beauty confidently and live authentically without seeking approval today!

Image: Shutterstock
ஸ்கின் கிராப்ட் நிறுவனத்தாரின் #Iammytype ஹாஷ்டேக் ஆனது தற்போது பரபரப்பான ட்ரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது. நான் என்னைப் போன்றவள் / போன்றவன் எனும் அர்த்தம் பொதிந்த இந்த வார்த்தை மற்றும் அதன் பலம் நமக்கு இந்த காலத்தில் மிகவும் அவசியமானது.
வீடோ அலுவலகமோ அல்லது பொது இடமோ இடம் எதுவாக இருந்தாலும் ஒரு சில கேள்விகளை தவிர்க்க முடிவதே இல்லை. அவள் ஏன் இருண்ட நிறமாக இருக்கிறாள், அவள் ஏன் குண்டாக இருக்கிறாள், அவன் ஏன் ஒல்லியாக இருக்கிறான், அவனுக்கு ஏன் இன்னும் மீசை வளரவில்லை, நீ ஏன் இப்படியான ஆடைகளை அணிகிறாய், நீ ஏன் இப்படி நடக்கிறாய், உனக்கு ஏன் முடி குறைவாக இருக்கிறது, நீ ஏன் இப்படி கால் மேல் கால் போட்டு அமர்கிறாய் , உனக்கு சரியாக சாப்பிடக் கூட தெரியாதா என தொடர்ந்து நமது அன்றாடங்கள் முதல் அந்தரங்கங்கள் வரை அனைத்தையும் யாராவது ஒருவர் உரிமை என்கிற பெயரிலோ அல்லது அதிகாரம் என்கிற பெயரிலோ அல்லது அவர்களின் உளவியல் சிக்கல்கள் காரணமாகவோ இப்படியான கேள்விகளை நம்மிடம் தொடர்ந்து எழுப்பியபடியே இருக்கிறார்கள்.
நாட்களாக நாட்களாக நம் மீது நமக்கே சந்தேகம் வருகிறது. இப்படியான தொடர் துன்பங்கள் நம்மை மாற்றாமல் இருக்க ஸ்கின் கிராப்ட் நிறுவனம் #Iammytype எனும் ஹாஸ்டேக் பயன்படுத்தி அதன் தனித்துவமான வாடிக்கையாளர்களுக்கு அவர்களைப் பற்றிய புரிதலை மேலும் அதிகப்படுத்தியது அதைப் பற்றித்தான் பார்க்க போகிறோம்.
In This Article
#Iammytype என்றால் என்ன ?
சுருக்கமாக சொல்வதென்றால் உங்கள் உண்மையான சுயத்துடன் நிற்க ஒரு அழைப்பு…அவ்வளவுதான். காலம் காலமாக ஒரே மாதிரியான சமூக நிர்பந்தங்களுடன் வாழும் வாழ்வை விட்டு உங்கள் தனித்தன்மையை துணிச்சலோடு மற்றவர் முன்னிலையில் ஒப்புக் கொள்வதும் அதன் சிறப்புகளை மேலும் வளர்ப்பதும் இதன் குறிக்கோள் எனலாம்.
ஸ்கின் கிராஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சைதன்யா நல்லான், #Iammytype பிரச்சாரத்தை ஒரு புரட்சிகர மாற்றமாக பார்க்கிறார். நாம் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது என்று அவர் கூறுகிறார். ஒவ்வொருவரின் தேவைகளும் வித்தியாசமாக இருக்கும்போது, அவற்றின் தீர்வும் வித்தியாசமாக இருக்க வேண்டும். ஸ்கின் கிராஃப்ட் இந்த கருத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
ஒவ்வொரு பெண்ணும் அவளுடைய சருமம் மற்றும் கூந்தலுக்கு தனித்தன்மை பெற்றவர்கள். அதற்கு ஏற்ப ஒரு அழகு சாதனத்தை வடிவமைப்பதே எங்கள் முயற்சி. இந்த வேலைக்கு செயற்கை நுண்ணறிவின் உதவியை நாங்கள் எடுத்து வருகிறோம். AI ஐ அறிமுகப்படுத்துவதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது, பெண்களின் சருமம் மற்றும் கூந்தலுக்கு எந்த தயாரிப்பு சிறந்தது என்ற குழப்பத்திலிருந்து பெண்களை வெளியேற்றுவது. இரண்டாவதாக, சரும பராமரிப்பு தயாரிப்புகளை அவற்றுடன் இணக்கமாக்குவது.
எல்லோருடைய சருமமும் சிறப்பு என்று நாங்கள் நம்புகிறோம். அத்தகைய சூழ்நிலையில், ஒவ்வொரு பெண்ணின் பிரச்சினையின் சருமத் தீர்விலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று ஸ்கின்க்ராப்ட் நிறுவனர் சைதன்யா நல்லான் விளக்குகிறார்.
View this post on Instagram
இந்த நான் என் வகையைச் சார்ந்தவள் எனும் பிரச்சாரம் நீங்கள் உண்மையிலேயே யார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும் என்பதையும், நீங்கள் ஒரு தனித்துவ வகையானவர் என்பதையும் இது உங்களுக்கு நினைவூட்டுகிறது.
நீங்கள் பள்ளியில் கண்டிப்பான ஆசிரியராக இருக்கலாம், ஆனால் நீங்கள் வீட்டில் ஒரு சூப்பர் வேடிக்கையான அம்மா! நீங்கள் கல்லூரியில் ஒரு முட்டாள்தனமான குழந்தை என்று குறிக்கப்பட்டுள்ளீர்கள், ஆனால் நீங்கள் ராக் இசை நிகழ்ச்சிகளில் ஒரு நட்சத்திர கலைஞராக இருக்கிறீர்கள். உங்கள் வண்ண முடி, குத்துதல் மற்றும் பச்சை குத்தல்கள் காரணமாக நீங்கள் பலருக்கு கட்டுக்கடங்காத ஹிப்பியாக தோற்றம் தரலாம் ஆனால் நீங்கள் ஒரு வயதான முதியவர் வீட்டில் ஒரு முழுநேர தன்னார்வலர் என்று அவர்களுக்குத் தெரியாது.
உலகத்திற்கு எதுவும் தெரியாது என்பதற்கான பல காரணங்களுக்காக நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள், அதை நீங்கள் அறிந்தும் அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் வரை, உங்களை யாரும் குறிப்பிடப்பட்ட வகை சார்ந்த பெயரை சொல்லி அழைக்க முடியாது என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.
மொத்தத்தில், நீங்கள் ஒரு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ, இளைஞராகவோ, வயதானவராகவோ, பணக்காரராகவோ அல்லது ஏழையாகவோ இருந்தாலும் பரவாயில்லை, நீங்கால் ஆச்சர்யப்படும் வகையில் தனித்துவமானவர் என்பது உங்களுக்கு தெரியுமா ? நீங்கள் எந்த வகையான நபர் என்பதைப் பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நீங்கள் யார் என்று உங்களுக்குத் தெரியும்போது நீங்கள் ஒரு ஆளுமை வகைக்குத் தள்ளப்படுவதைப் போல எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா?
இந்த அற்புதங்களை உணர சுயமாக உங்களை நீங்களே ஆராயுங்கள். ஒரு நாளின் மிக அமைதியான மற்றவர்களின் குறுக்கீடற்ற முழுக்க உங்களுக்கு மட்டுமேயான சில மணிநேர தனிமை உங்களை யார் என்று கண்டுகொள்ள உதவி செய்யும்.
உலகின் மிக முக்கிய உணர்வுகளில் ஒன்றான தன்னம்பிக்கையை மீட்டெடுக்கும் இந்த ஒற்றை சொல்லை நான் மிகவும் நேசிக்கிறேன். உங்களுக்கும் இந்த சொல்லின் மீது மிகப்பெரிய காதல் இருந்தால் இப்போதே உங்கள் வலைத்தளத்தில் இந்த வார்த்தையை #Iammytype பகிருங்கள். கூடவே கட்டுரையையும்!
உங்கள் தனித்துவங்களை மீட்டெடுங்கள். உங்களுக்கு பொருந்தாத பொதுவானவைகளை புறம் தள்ளுங்கள். உங்களுக்கென தனித்துவமாக உருவாக்கப்படும் கஸ்டமைஸ்ட் சருமத் தயாரிப்புகளை பயன்படுத்துங்கள்.

Community Experiences
Join the conversation and become a part of our empowering community! Share your stories, experiences, and insights to connect with other beauty, lifestyle, and health enthusiasts.