சித்திரை வருடப் பிறப்பு – பாரம்பர்ய கொண்டாட்ட வழிமுறைகள்

Celebrate heritage with vibrant rituals and timeless customs marking ancient beginnings.

Written by Deepa Lakshmi
Last Updated on

தமிழர்களின் புத்தாண்டாக தமிழக மக்களால் கொண்டாடப்படுவது சித்திரை மாதம் முதல் நாள் ஆகும். தெலுங்கு புத்தாண்டு அதற்கு ஒரு நாள் முன்னதாகவே கொண்டாடப்படுகிறது. இதற்கான நிரூபணங்கள் தொல்காப்பியம் முதலான காவியங்கள் தன்னகத்தே வைத்திருக்கின்றன.

தமிழர்கள் எவற்றையும் காலத்தின் அடிப்படையில் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். புத்தாண்டும் அதற்கு விதிவிலக்கு அல்ல. அறிவியல் அறியப்படும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழகக் கோயில்கள் உருவாக்கப்பட்டது.

அப்படி பழமையான கோயில்களில் காணப்படும் நவக்கிரகங்களையும் அதன் பெயர்களையும் அறிவியல் அறியாத காலங்களில் ஆன்மிக வழியாகக் கண்டறிந்தவர்கள் நம் முன்னோர்கள்.

சித்திரைப் புத்தாண்டு ராசிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ராசிகளில் முதன்மையான மேஷ ராசியில் சூரியன் வசிக்க வரும் துவக்க நாளையே நாம் தமிழர்களின் புத்தாண்டாக கொண்டாடி வருகிறோம்.

இந்த வருடம் பிலவ வருடம் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பெயர்கள் வருடா வருடம் மாறி வரும்.

வசந்த காலத்தின் ஆரம்பத்தில் நம் ஆண்டு பிறப்பது எத்தனை ஆச்சர்யமானது ! அதே வசந்தம் ஆண்டு முழுதும் தொடரும் வகையில் இந்த நாளை நாம் கொண்டாட வேண்டுமல்லவா ! ( Tamil New year 2025 )

சித்திரை வருடப்பிறப்பை பாரம்பரிய முறைப்படி எப்படி கொண்டாடுவது எனப் பலருக்கும் சந்தேகங்கள் இருக்கலாம். அதன் வழிமுறைகளை இப்போது காண்போம்.

தமிழ் புத்தாண்டு கொண்டாடும் முறைகள்

pinit button
Image: IStock

முதலில் நீங்கள் எந்த விதமான கொண்டாட்டமாக இருந்தாலும் உங்கள் வீட்டை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் பாசிட்டிவ் எனெர்ஜி அதிகரிக்கும். தெய்வங்கள் உங்கள் வீட்டில் குடியிருக்க விரும்புவார்கள். முதல் நாளே வீட்டினை நீர் பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்ளவும். வாசலில் கோலமிடவும். வாசல் படிகளில் மஞ்சள் இடவும்

பூஜை அறையை சுத்தம் செய்து அங்கே முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை வைக்கவும். கண்ணாடிக்கு மஞ்சள் குங்குமம் மற்றும் பூக்கள் வைக்கவும். கண்ணாடி முன்பு சீர்வரிசை போல பல விஷயங்களை நீங்கள் அடுக்க வேண்டும்.

தாம்பூலத் தட்டில் பழங்களை வரிசையாக வைக்கவும். திராட்சை மாதுளை மாம்பழம் பலாப்பழம் வாழைப்பழம் போன்றவை தேவை. அதன் பின்னர் உங்களிடம் உள்ள பழங்களை நீங்கள் வைக்கலாம். அதன் பின்னர் சிறிய கப்களில் அரிசி, பருப்பு, புளி , நவதானியங்கள் , வெல்லம் , கல் உப்பு போன்றவயதை வரிசையாக அடுக்குங்கள்.

நவதானியங்கள் ஏதேனும் ஒன்று இருந்தாலும் போதுமானது. தலை தட்டாமல் குவித்து வைக்கவும். பின்னர் ஒரு செம்பு பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் பூக்களை போடவும். அதன் பின்னர் மற்றொரு தாம்பூலத் தட்டில் சில்லறைக் காசுகள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை வைக்கவும். இதனுடன் தங்க ஆபரணங்கள் கண்ணாடி வளையல்கள் போன்றவற்றை சேர்க்கலாம். இதனுடன் வெற்றிலை பாக்கு மற்றும் பழங்கள் அவசியமானது ( tamil new year celeberations ) .

இவற்றை வருடப்பிறப்பிற்கு முதல் நாள் இரவே செய்து வைத்து விட வேண்டும். அடுத்த நாள் காலை உங்கள் குடும்பத்தினர் அனைவரும் இந்த சீர்வரிசையின் பிம்பத்தை தரிசிக்க வேண்டும். அதாவது கண்ணாடி மூலமாக இந்த பொருள்களை பார்க்க வேண்டும். தூங்கி எழுந்ததும் இதனைப் பார்ப்பது நல்லது.

வருடப்பிறப்பன்று செய்ய வேண்டியவை

pinit button
Image: IStock

அதன்பின் குடும்பத்தினர் அனைவரும் குளித்து முடித்ததும் உங்களால் இயன்ற உணவுப்படையலை செய்து இறைவனுக்கும் இறைவிக்கும் ஆரத்தி காட்டவும். உங்கள் குலதெய்வத்தை மனதால் நினைத்து இந்த வழிபாட்டை தொடரவும். அதன் பின்னர் பாயசம் சர்க்கரைப்பொங்கல் போன்ற நிவேதனங்களை நீங்கள் செய்யலாம். கற்பூரம் காட்டி அனைவருக்கும் கொடுத்து பூஜையை முடிக்கவும்

வருடபிறப்பு நாளன்று நமது உணவில் அறுசுவைகளை இடம்பெறச் செய்ய வேண்டும்.  இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு போன்ற ஆறு சுவைகளும் மனிதனின் வெவ்வேறு உணர்வுகளை வெவ்வேறு குணங்களை அடையாளப்படுத்துகிறது. இந்த உணர்வுகளை ஒன்றாக உண்பதால் சமநிலையில் இந்த புத்தாண்டு அமையவேண்டும் என்பது இதன் தத்துவமாகும்.

சித்திரையில் சூரியன் சக்தி நிறைந்தவராக இருப்பதால்  நீர் மோர், பானகம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து அவற்றை நம் உணவாக அருந்துவது நமது உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும். அதிலும் வேப்பம்பூவை பச்சடி செய்து நமது உணவில் சேர்ப்பதால் கிருமிகள் அழிகின்றன. வேம்பூ நம் உடலை பரிசுத்தம் செய்கின்றன.

உங்கள் குடும்பத்தாருக்கும் உங்களுக்கும் உணவு பஞ்சம் பணபஞ்சம் ஆபரணப்பஞ்சம் போன்றவை ஏற்படாமல் இருக்கவும் உலகிலும் நவதானிய பஞ்சங்கள் ஏதுமின்றி செழிப்பாக இருக்கவும் இந்தப் பிரார்த்தனை செய்யப்படுகிறது ( Tamil new year and its specialities ) .

புத்தாண்டு அன்று புதிய ஆடைகள் அணிவது நமது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். வசதி இருப்பின் அணிந்து கொள்ளலாம். இறைவனை சந்திக்க செல்வது மிக மிக நல்லது. அவரவருக்கு விருப்பமான கோயில்களில் இறை தரிசனம் செய்யலாம். வீட்டில் இருந்தபடியே பிரபஞ்ச தியானமும் செய்யலாம்.

தீநுண்மி நமக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. எனவே மாஸ்க் அணிந்து சானிடைசர் பயன்படுத்தி வெளியில் செல்லவும். முடியாதவர்கள் வீட்டில் இருந்தே தியானம் செய்யலாம்.

கோயில்களில் சித்திரைப் புத்தாண்டு அன்று பஞ்சாங்கம் படிப்பது வழக்கமாக இருக்கிறது. அந்த சொற்பொழிவை கேட்பதால் நமது மனம் நிறையும். இந்த வருடம் நாம் எப்படி தற்காத்து கொள்ளலாம் என்கிற அறிவு பிறக்கும். நம் வாழ்வும் மிக சிறப்பானதாக செழிப்பானதாக மாறும்.

அவ்வளவுதான் உங்களுக்கான பிலவ வருடம் சிறப்பாக அமைய எங்கள் வாழ்த்துக்கள் !

Was this article helpful?
thumbsupthumbsdown

disqus_comment

Community Experiences

Join the conversation and become a part of our empowering community! Share your stories, experiences, and insights to connect with other beauty, lifestyle, and health enthusiasts.

Latest Articles